ரஷ்ய தயாரிப்பு சொகுசு காரை வடகொரிய ஜனாதிபதி கிம்முக்கு பரிசளித்த விளாடிமிர் புடின்
ரஷ்யா ஜனாதிபதி புடின் உள்நாட்டு தயாரிப்பு காரினை கிம் ஜாங் உன்னுக்கு வழங்கியதாக வடகொரியா தெரிவித்துள்ளது.
ரஷ்ய தயாரிப்பு கார்
விளாடிமிர் புடின் ரஷ்ய தயாரிப்பு காரை தனிப்பட்ட பயன்பாட்டிற்காக, வடகொரியா ஜனாதிபதி கிம் ஜாங் உன்னுக்கு பரிசளித்துள்ளதாக அந்நாட்டு ஊடகம் தெரிவித்துள்ளது.
அத்துடன் கிம்மின் சகோதரி கிம் யோ ஜாங் மற்றும் வடகொரிய அதிகாரி இந்த பரிசினை ஏற்றுக்கொண்டதாகவும், கிம் நன்றி கூறியதாக புடினிடம் அவர் தெரிவித்ததாகவும் செய்தி நிறுவனம் கூறியுள்ளது.
ஆனால் அது எந்த வகையான வாகனம், எப்படி அனுப்பப்பட்டது என்பது குறித்த அறிக்கையில் கூறப்படவில்லை.
அழுத்தம் கொடுக்கும் முயற்சி
எனினும், அணு ஆயுதங்களை கைவிடுமாறு அந்நாட்டுக்கு அழுத்தம் கொடுக்கும் முயற்சியில், வடகொரியாவுக்கு ஆடம்பரப் பொருட்களை வழங்குவதைத் தடை செய்யும் ஐ.நா.வின் தீர்மானத்தை இது மீறக்கூடும் என்று உற்றுநோக்குபவர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த நிலையில், புடின் அளித்த பரிசு இருநாடுகளின் தலைவர்களுக்கிடையேயான தனிப்பட்ட உறவைக் காட்டுவதாகவும் ஒரு அறிக்கை கூறுகிறது.