தீப்பிடிக்கும் விவகாரம்… உக்ரைன் தானியங்களை சாலையில் கொட்டி விவசாயிகள் போராட்டம்
உக்ரைனில் இருந்து தானியங்களை இறக்குமதி செய்வதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துவரும் போலந்து விவசாயிகள், தானியங்களை சேதப்படுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இது முழுக்க முழுக்க அரசியல்
உக்ரைன் தானிய இறக்குமதிக்கு எதிராக போலந்து முழுவதும் விவசாயிகள் கடும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில், சரக்கு ரயிலில் இருந்து தானியங்களை கொட்டி விவசாயிகள் ஆர்ப்பட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆனால் போலந்து வேளாண் மக்களின் ஆர்ப்பாட்டத்தை கேலிக்கூத்து என உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். திங்களன்று காணொளி ஊடாக தமது கருத்தை பதிவு செய்துள்ள ஜனாதிபதி ஜெலென்ஸ்கி,
உக்ரைன் தானியங்களை இறக்குமதி செய்வதற்காக இந்த போராட்டம் முன்னெடுக்கப்படவில்லை, மாறாக இது முழுக்க முழுக்க அரசியல் என குறிப்பிட்டுள்ளார். ரஷ்ய எல்லைக்கு மிக மிக அருகாமையில் அமைந்துள்ள Kupiansk நகரில் எதிர்களின் நடவடிக்கை அதிகரித்துள்ளது.
ஆனால் போலந்து எல்லையில் இருந்து வெளிவரும் தகவல் என்பது வெறும் கேலிக்கூத்து என்றார். இந்த சூழலில் இருந்து வெளியேற கூட்டான மற்றும் பகுத்தறிவு மிகுந்த முடிவுகள் எடுக்க வேண்டும் என்றார்.
வெறும் 5 சதவிகித உக்ரைன் தானியங்கள் மட்டுமே போலந்தில் சந்தைப்படுத்தப்படுகிறது. இதனால் போலந்து விவசாயிகள் பாதிக்கப்படுகிறார்கள் என்பது ஆராயப்பட வேண்டும் என்றும், இரு நாடுகளும், ஐரோப்பாவின் எதிர்காலம் குறித்து அக்கறை கொண்ட மூன்றாவது நாடும் இந்த சிக்கலுக்கு தீர்வு காண முன்வர வேண்டும் என்றார்.
தரமற்ற தானியங்களை
சமீப நாட்களாக பிரான்ஸ், பெல்ஜியம், போர்ச்சுகல், கிரீஸ், ஸ்பெயின் மற்றும் ஜேர்மனி ஆகிய நாடுகளில் உள்ள விவசாயிகள் பருவநிலை நெருக்கடியைச் சமாளிக்க ஐரோப்பிய ஒன்றிய நடவடிக்கைகளால் தங்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அத்துடன் அதிகரித்து வரும் செலவுகளால் பாதிக்கப்படுவதாகவும் வெளிநாட்டில் இருந்து நியாயமற்ற போட்டியும் தங்கள் வாழ்வாதாரத்தை பாதிப்பதாக அவர்கள் கூறுகின்றனர்.
ஆனால் போலந்து விவகாரத்தில், தரமற்ற தானியங்களை உக்ரைன் தங்கள் நாட்டில் சந்தைப்படுத்துவதாக அங்குள்ள வேளாண் மக்க குற்றஞ்சாட்டியுள்ளனர்.
மட்டுமின்றி, உக்ரேனிய தானியங்களை இறக்குமதி செய்வதை நிறுத்தவும், பழங்கள், முட்டை மற்றும் இறைச்சி உள்ளிட்ட பிற பொருட்களுக்கு தடையை நீட்டிக்கவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.