கனடாவில் வீட்டு வாடகைச் செலவைக் கட்டுப்படுத்த, ஒவ்வொரு முறையும் விமானத்தில் சென்றுவரும் மாணவர்!

கனேடிய மாணவர் ஒருவர் வான்கூவரில் அதிக வீடு வாடகை செலுத்துவதைத் தவிர்ப்பதற்காக வாரத்திற்கு இரண்டு முறை பல்கலைக்கழகத்திற்கு சென்றுவருகிறார்.

கனடாவில் உள்ள Calgary மற்றும் Vancouver நகரங்களுக்கு இடையே உள்ள தூரம் சுமார் 700 கிலோமீட்டர்கள்.

வான்கூவர் நகரத்தில் வீட்டு வாடகையை கேட்டால் மிகவும் அதிர்ச்சியளிக்கு வகையில் மிகமிக அதிகமாக இருக்கும்.

இதனால் பாதிக்கப்பட்ட மாணவர் ஒருவர் தனது முடிவை மாற்றிக்கொண்டார். இவ்வாறு அதிக வாடகையை செலுத்துவதை விட, அவர் தினமும் விமானத்தில் சென்று வகுப்புகளில் கலந்துகொள்ள முடிவு செய்தார்.

கொலம்பியா பல்கலைக்கழகத்தின் (UBC) மாணவர் டிம் சென் (Tim Chen), வாரத்திற்கு இரண்டு முறை கால்கரியில் இருந்து வான்கூவர் வரை விமானத்தில் பயணம் செய்து தற்போது ஊடகங்களில் தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்துள்ளார்.

டிம் சென் தனது அனுபவத்தை சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார், அதே நேரத்தில் வான்கூவரில் Single Bedroom வீடு வாடகைக்கு சுமார் 2,100 US Dollar செலவாகும்.

இது இலங்கை பணமதிப்பில் சுமார் ரூ.6.55 லட்சம் ஆகும்.

சென் ஒவ்வொரு ரவுண்ட்-டிரிப் விமானத்திற்கும், ஒவ்வொரு வாரமும் இரண்டு நாட்களுக்கு தோராயமாக $150 செலவழிக்கிறார்.

அதன்படி, அவரது மாதாந்திர பள்ளிப் பயணச் செலவுகளை 1,200 டொலரில் முடிக்கிறார்.

சென் சமீபத்தில் Reddit-ல் இதனை பதிவு செய்தார். அவரது இந்த பதிவிற்கு நெட்டிசன்கள் பல்வேறு விதமாக பதிலளித்து வருகின்றனர்.

இது நேரத்தை வீணடிப்பதாக ஒருவர் கூறினார். ​​மற்றொரு பயனர் இது நவீன பிரச்சனைகளுக்கு நவீன தீர்வு என்று கருத்து தெரிவித்துள்ளார்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *