கொல்லைப்புறத்தில் வெளிநாட்டு பழங்களை விளைவித்து.. “கோடியில் புரளும்” கேரள இளைஞர்!

கொச்சி: சிறு ஊர்கள் என்றால் வீட்டுக்கு பக்கத்தில் ஏறத்தாழ எல்லோருக்குமே 5 சென்ட் நிலமாவது இருக்கும். வழக்கமாக அதை செடிகள் வளர விட்டிருப்போம். ஆனால் அந்த சிறிய இடத்தில் சில குறிப்பிட்ட பயிர்களை போட்டு கோடிக்கணக்கில் லாபம் ஈட்டி வருகிறார் கேரளாவின் ஆலுவா பகுதியைச் சேர்ந்த ஆஷால்.

தனது வீட்டில், லாக்டவுன் காலத்தின்போது எக்ஸாடிக் பழங்களை இயற்கை முறையில் பயிரிடத் தொடங்கி இப்போது இந்த நிலைக்கு வளர்ந்துள்ளார்.

ஆலுவாவில் உள்ள ஒரு ஹெல்த்கேர் நிறுவனத்தில் தொழில்முறை நிபுணரான 29 வயதான ஆஷால் பிஎச்சுக்கு, எக்ஸாடிக் பழங்களை பயிரிடுவதில் மிகுந்த ஆர்வம் உள்ளது. இந்த ஆர்வம், அவர் நினைத்ததை விட அதிக பலனைத் தந்துள்ளது.

சாதாரணமாக மார்க்கெட்டில் கிடைக்காத பழ ரகங்களை பயிரிட வேண்டும் என்ற ஆர்வத்தினால் லாக்டவுன் காலத்தில் வெளிநாட்டு பழ வகைகளை பயிரிடும் பரிசோதனையில் இறங்கினேன்.

அப்படி ஆன்லைனில் நான் கண்டுபிடித்த முலாம்பழம் குடும்பத்தைச் சேர்ந்த வியட்நாமிய பழமான கேக் உடன் எனது முயற்சியைத் தொடங்கினேன்.

ஒரு பழவகையின் ஆண் மற்றும் பெண் தாவரங்கள் இருந்தால்தான் மகரந்தச் சேர்க்கை மூலம் பழங்கள் விளைவிக்க முடியும். உள்ளூர் நர்சரியில் மரக்கன்றுகளை வாங்கி மொட்டை மாடியில் நட்டேன். அவை நல்ல தரமான விளைச்சலைக் கொடுத்தன. இந்த வெற்றி என்னை மேலும் தனித்துவமான பழச் செடிகளை வளர்க்கத் தூண்டியது என்கிறார் ஆஷால்.

அதைத் தொடர்ந்து, அவர் தனது வீடு அமைந்துள்ள 5 சென்ட் நிலத்தில் பிரேசிலியன் பேஷன் ஃப்ரூட், மிராக்கிள் ஃப்ரூட், டிராகன் பழம் உள்பட பல வகைகளை பயிரிடத் தொடங்கினார். கடந்த நான்கு ஆண்டுகளில், பலவிதமான கவர்ச்சியான பழங்களை இயற்கை முறையில் பயிரிட்டுள்ளார். அவரது விவசாய முறை மிகவும் எளிமையானது. அவர் தனது வீட்டு முற்றத்தில் ஒரு சிறிய பரப்பளவில் அவற்றை வளர்ப்பதால், தேவையற்ற தாவரங்களை அவர் பயிரிடுவதில்லை.

ஒவ்வொரு வகையிலும் ஒரு செடி மட்டுமே நடுவார். சில பழங்கள் ஆண்டு முழுவதும் விளைகின்றன. ஆஷால் ஏறக்குறைய எட்டு மாதங்களுக்கு முன்பு கம்போடிய காட்டு திராட்சை பழச் செடியை நட்டு, அதன் கொடி படர்வதற்கு ஆதரவாக குறுக்கு நெடுக்காக அடிக்கப்பட்ட ஒரு மரத் தட்டியைக் கட்டினார். ஆறு மாதங்களில் பூக்க ஆரம்பித்தது. இரண்டு மாதங்களுக்குப் பிறகு, பழம் முளைக்கத் தொடங்கியது.

ஒவ்வொரு கொத்திலும் சுமார் 600-1000 பழங்கள் காய்க்கும். ஏற்கனவே 16 கொத்துகளை அறுவடை செய்துள்ளேன். இதில் ஆச்சரியம் என்னவென்றால், இந்த பெரிய தேன்கூடு போன்ற கொத்துகளை கொண்டிருக்கும் தண்டுகள் வலிமையானவை. இந்த செடி வளர்ந்து எட்டு மாதங்களே ஆனதாகத் தெரியவில்லை. அதன் வேர் மரவள்ளிக்கிழங்கை போன்று உள்ளது. இது புதிய மரக்கன்றுகளைப் பரப்புவதற்குப் பயன்படுத்தப்படலாம்.

வழக்கமான திராட்சையின் புளிப்புச் சுவைக்கு மாறாக, இந்த காட்டு கம்போடிய வகையானது மிகவும் இனிப்புத்தன்மையைக் கொண்டுள்ளது. இது மற்றொரு ஆச்சரியமான விஷயமாகும், இந்த காட்டுப் பழச் செடிகளின் அசாதாரண விளைச்சலைக் காண ஏராளமான விவசாயிகள், வேளாண் அதிகாரிகள், ஆர்வலர்கள் எனது வீட்டுக்கு வருகின்றனர் என்றார் ஆஷால்.

எர்ணாகுளத்தில் உள்ள வேலியத் கார்டன் நர்சரியில் இருந்து கம்போடிய திராட்சை கன்றுகளை ஆஷால் வாங்கியுள்ளார்.

கம்போடிய காட்டுத் திராட்சைகளைத் தவிர, ஆஷாலிடம் தற்போது டெரெங்கானு செர்ரி, சன்ட்ராப், யூஜினியா புளோரிடா, டிராகன் பழம், அபியூ, ஊதா காடு கொய்யா, பராபா, மெடுசா அன்னாசி, ஜபோடிகாபா, சிவப்பு சுரினம் செர்ரி, பெர் ஆப்பிள் ரெட், பாஷன் ஃப்ரூட் மற்றும் மிராக்கிள் பழங்கள் உள்ளன.

ஒவ்வொரு டிசம்பரில், நான் சில பிரேசிலியன் பேஷன் பழ மரக்கன்றுகளை நடுகிறேன், மார்ச் மாத தொடக்கத்தில், அவை பலனளிக்கத் தொடங்குகின்றன. அதன் ஆரோக்கிய நன்மைகளுக்காக மருத்துவர்களால் அங்கீகரிக்கப்பட்டு, காய்ச்சல் மற்றும் டெங்குவால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் இந்த பழங்களை இலவசமாகப் பெறவதற்காகவே எங்கள் வீட்டுக்கு வந்து செல்கின்றனர் என்று மகிழ்ச்சியுடன் ஆஷால் கூறுகிறார். இந்தப் பழங்கள் விற்பனையில் அவர் மாதந்தோறும் பல லட்சக்கணக்கான ரூபாயை சம்பாதித்து வருகிறார். ஆண்டுக்கு கோடிக்கணக்கில் வருவாய் வருகிறது.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *