சிஎஸ்கே அணிக்கு வருகிறார் சர்பராஸ் கான்? முக்கிய வீரருக்கு காயம்.. காய் நகர்த்தும் தோனி, கம்பீர்

இந்திய கிரிக்கெட்டில் சமீப காலத்தில் எந்த ஒரு கிரிக்கெட் வீரருக்கும் அறிமுகப் போட்டியில் இவ்வளவு வரவேற்பும் ஆதரவும் இருந்திருக்காது. ஆறு ஆண்டுகள் போராட்டத்திற்குப் பிறகு சர்பராஸ் கான் இந்திய அணிக்கு வந்து தனது முதல் சர்வதேச போட்டியில் விளையாடியிருக்கிறார்.

அண்டர் 19 கிரிக்கெட்டில் தொடங்கி ரஞ்சி கிரிக்கெட்டில் பட்டையை கிளப்பிய சர்ஃப்ராஸ் கான் தன்னுடைய முதல் ஐபிஎல் போட்டியை 2015 ஆம் ஆண்டு விளையாடிவிட்டார். ஆனால் இந்த ஒன்பது ஆண்டுகளில் வெறும் 50 போட்டிகள் மட்டும் தான் சர்பராஸ்கான் விளையாடியிருக்கிறார்.

மொத்தமாக அவர் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் 585 ரன்கள் அடித்திருக்கிறார். அதிகபட்சமாக 67 ரன்கள். சராசரி 22.50 என்ற அளவில்தான் இருக்கிறது. ஸ்டிரைக் ரேட் 130 என்ற அளவில் வைத்திருந்தார். சர்பராஸ் கானுக்கு ஐபிஎல் போட்டிகள் கூட வாய்ப்பு கிடைக்காமல் போய்விட்டது. அவர் ஒன்பது ஆண்டுகளில் பெரும் அளவு தொடர் வாய்ப்பு இல்லாமல் தடுமாறி வருகிறார்.

இந்த நிலையில் ஐபிஎல் 17வது சீசனுக்கான மினி ஏலத்தில் கூட சர்பராஸ் கானை வாங்க எந்த அணி நிர்வாகமும் நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்டில் தன்னுடைய திறமையை சர்பராஸ் கான் நிரூபித்து விட்டார். இதனால், ஒவ்வொரு ஐபிஎல் அணிகளும் தாங்கள் தவறு செய்து விட்டோமே என்று தற்போது புலம்பி வருகிறார்கள்.

இதனால் சர்பராஸ்கான் எப்படியாவது தங்கள் அணிக்குள் இழுக்க வேண்டும் என்று ஒவ்வொரு அணியும் போட்டி போட்டு வருகிறது. இந்த நிலையில் ஏலம் எல்லாம் முடிந்து விட்டதால் ஏதேனும் காயம் அடைந்தால் மட்டுமே வீரர்களை மாற்ற முடியும். இந்த நிலையில் சிஎஸ்கே அணியில் சிவம் துபேக்கு காயம் ஏற்பட்டிருக்கிறது.

இதனால் அவருடைய காயம் எந்த வகையில் இருக்கிறது என்பதை ஆராய்ந்து அவர் போட்டியில் பங்கேற்பாரா இல்லையா என்பது இனிமேல் தான் தெரிய வரும். இதனால் சர்பராஸ் காணை மாற்றுவீராக சேர்க்க சிஎஸ்கே அணி ஆயத்தம் காட்டி வருகிறது. சுழற் பந்துவீச்சை அபாரமாக ஆடுவதால் சர்பராஸ் கானுக்கு நல்ல எதிர்காலம் இருப்பதாக சிஎஸ்கே அணி நிர்வாகம் கருதுகிறது.

இதேபோன்று கொல்கத்தா அணியில் புதிய பேட்டிங் இல்லாததால் சர்ஃப்ராஸ்கான் எப்படியாவது கொண்டு வந்து விடுங்கள் என அணி நிர்வாகத்திற்கு கம்பீர் அறிவுரை கூறியுள்ளார்.மினி ஏலத்தில் யாருமே கண்டுகொள்ளாத நிலையில், ஒரு டெஸ்ட் போட்டி சர்ஃபிராஸ் கானின் ஒட்டுமொத்த வாழ்க்கையையும் மாற்றிவிட்டது.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *