ஆதார் அட்டை அப்டேட் செய்யாத பட்சத்தில் கேன்சல் ஆகுமா ? வெளியான முக்கிய தகவல்..!
இந்திய தனித்துவ அடையாள ஆணையம் ஆனது நாட்டின் அனைத்து குடிமக்களுக்கும் ஆதார் அட்டையை 12 இலக்க தனித்துவ எண்களுடன் வழங்கியுள்ளது. பிறந்த குழந்தைகள் முதல் அனைவருக்கும் வழங்கப்படும் இந்த ஆதார் அட்டை தான் நாட்டின் மிக முக்கியமான ஆவணமாக விளங்கி வருகிறது.
ஆதார் அட்டையில் குடிமக்கள் தங்கள் அனைத்து விவரங்களையும் புதுப்பித்துக் கொள்ள வேண்டும் என்றும் பத்தாண்டுகள் கடந்த அனைவரும் இதை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தி இருந்தது.
ஆதார் அட்டை அப்டேட் செய்யாத பட்சத்தில் கேன்சல் ஆகிவிடும் என்ற தகவல்கள் பரவி வந்தது. இது குறித்து நேற்று இந்திய தனித்து அடையாள ஆணையமானது, ஆதார் அட்டையை புதுப்பிக்காமல் இருந்தால் ஆதார் எண் கேன்சர் செய்யப்படாது என்று தெரிவித்துள்ளது.
ஆதார் எண் தொடர்பான தங்களது குறைகளை பொதுமக்கள் https://uidai.gov.in/en/contact-support/feedback.html. என்ற இணையதளத்தில் சென்று சமர்ப்பிக்கலாம் என்றும் அரசு குறைகளை உடனடியாக நிவர்த்தி செய்யும் என்றும் தெரிவித்துள்ளது.