அனிதா குப்புசாமிக்கு மகள் கொடுத்த சர்ப்ரைஸ்; காஸ்ட்லி கிஃப்ட் என்ன தெரியுமா?
அனிதா குப்புசாமி தனது சமூக வலைதள பக்கத்தில் தன்னுடைய மகள் கொடுத்த சர்ப்ரைஸ் குறித்து வீடியோ ஒன்று வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழகத்தில் கிராமிய பாடல்கள் என்றால் உடனே நினைவுக்கு வருவது புஷ்பவனம் குப்புசாமி – அனிதா தம்பதி தான். சென்னைப் பல்கலைக்கழகத்தில் பயின்ற போது இவர்கள் இருவரும் இணைந்து பல்வேறு போட்டிகளிலும், கச்சேரிகளிலும் ஒன்றாகப் பாடினர். அப்போது இவர்களிடையே காதல் மலர்ந்து இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிகளுக்கு பல்லவி என்கிற ஒரு மகள் இருக்கிறார்.
அனிதா குப்புசாமி தன்னுடைய கணவரோடு சேர்ந்து இந்தியாவில் மேலும் வெளிநாட்டிலும் மூவாயிரத்திற்கு மேற்பட்ட இசை நிகழ்ச்சிகளை நடத்தி உள்ளார். மேலும் தன்னுடைய பாடல்கள் மூலமாக எய்ட்ஸ், வரதட்சணை, புகைப்பிடித்தல், மது அருந்துதல், பெண் சிசுக்கொலை, குழந்தை உழைப்பு, பெண் கல்வியின் முக்கியத்துவம், தாய்ப்பால் போன்ற விஷயங்களை விழிப்புணர்வு பாடல்களாக பாடி பலரையும் விழிப்புணர்வு அடையச் செய்து வருகின்றார்.
மேலும், அனிதா குப்புசாமி தன்னுடைய யூடியூப் சேனல் மூலமாக ஆன்மீகம் முதல் ஆரோக்கியம் வரை பல்வேறு தகவல்களையும் பொதுமக்களுக்கு வழங்கி வருகிறார்.
இந்தநிலையில் அனிதா குப்புசாமியின் மகளான டாக்டர் பல்லவி தன்னுடைய அம்மா மற்றும் அப்பாவிற்கு இன்ப அதிர்ச்சி ஒன்று கொடுத்திருக்கிறார். அதாவது பல்லவி கொடுத்த சர்ப்ரைஸ் என்னவென்றால், தன்னுடைய அம்மா மற்றும் அப்பாவுக்கு ஜாக்குவார் கார் ஒன்று நேரடியாக வாங்கி கொண்டு வந்திருக்கிறார். ஏற்கனவே ஒருமுறை நாம இப்படி ஒரு கார் வாங்க போகிறோம் என்று டாக்டர் பல்லவி சொல்லி இருக்கிறார்.
View this post on Instagram
ஆனால் தற்போது அந்த காரை வாங்கியதை பற்றி சொல்லாமல் திடீரென தனது அப்பா அம்மா முன்னாடி அந்த காரை கொண்டு வந்து நிறுத்தியுள்ளார். இதனால், அனிதா குப்புசாமி மற்றும் அவருடைய கணவர் புஷ்பவனம் குப்புசாமி இருவரும் சந்தோஷமாக இருக்கிறார்கள். இதுதொடர்பாக அனிதா குப்புசாமி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவை பகிர்ந்து, ”ஜாகுவார் எக்ஸ்,எஃப் இல் என் மகள் டாக்டர் பல்லவி யைப் பார்த்ததில் ஆச்சரியமும் மகிழ்ச்சியும், எங்கள் நாள் சிறப்பானதாக அமைந்தது,” என்று பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
View this post on Instagram