மாவட்ட ஆட்சியரின் மனைவி காரை நிறுத்திய போலீசார்…உடனே பறந்த சஸ்பெண்ட் உத்தரவு நடவடிக்கை எடுத்தது எதற்கு தெரியுமா ?

சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் இரு தினங்களுக்கு முன்பு போக்குவரத்து போலீஸார் இருவர் தீவிர வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். விதிகளை மீறிய வாகனங்களுக்கு அவர்கள் அபராதமும் விதித்தனர். அப்போது ஐஏஎஸ் அதிகாரி ஒருவரின் மனைவியின் கார் அங்கு வந்துள்ளது. உள்ளே இருப்பது யார் என்று தெரியாமல் இந்த 2 போலீஸாரும் அந்த காரை மடக்கி பல விவரங்களை கேட்டுள்ளனர். இதையடுத்து, ஐஏஎஸ் அதிகாரியின் மனைவி இதுதொடர்பாக போலீஸ் உயரதிகாரிகளுக்கு தகவல் கொடுக்க, அடுத்த சில நிமிடங்களில் போலீஸாரின் வாக்கி டாக்கில் காவல் உயரதிகாரி ஒருவர் பேசியுள்ளார்.

அப்போது இந்த 2 போலீஸாரும் திருவல்லிக்கேணி போக்குவரத்து எல்லைக்குட்பட்ட பகுதியில் பணியாற்றும் சிறப்பு உதவி ஆய்வாளர் சிவலிங்கம் மற்றும் தலைமைக் காவலர் கென்னடி என்பதும் தெரியவந்தது. திருவல்லிக்கேணியில் பணிபுரியும் இவர்கள், தங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட எல்லையை தாண்டி வந்து வேறு போக்குவரத்து காவல் எல்லையான ஆயிரம் விளக்கு பகுதிக்கு வந்து வாகனத் தணிக்கையில் ஈடுபட்டது தெரியவந்தது.

இந்நிலையில், மேற்கூறிய போலீஸார் இருவரையும் பணியிடைநீக்கம் செய்து போக்குவரத்து இணை ஆணையர் மகேஷ்குமார் உத்தரவிட்டார்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *