மக்களே உஷார்..! இன்று வழக்கத்தை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகரிக்கும்..!
தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் கடந்த 24 மணி நேரத்தில் வறண்ட வானிலையே நிலவியுள்ளது. இதே போலவே இன்று மற்றும் நாளையும் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் வறண்ட வானிலையும் ஓரிரு இடங்களில் வெப்பநிலை வழக்கத்தை விட இரண்டு முதல் மூன்று டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும் என்று எச்சரிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தமிழகத்தின் உள் மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் அதிகாலை நேரத்தில் பனி மூட்டம் நிலவ வாய்ப்புள்ளது.
பிப்ரவரி 22ஆம் தேதி தென் தமிழக மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். மீனவர்களுக்கு எந்த விதமான எச்சரிக்கை அறிவிப்புகளும் இன்றைய அறிக்கையில் தெரிவிக்கப்படவில்லை.