பாரதீய ஜனதா கட்சி ரத யாத்திரையை துவக்கியது..!
தெலுங்கானா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ள நிலையில் பாராளுமன்ற தேர்தலில் அங்கு அதிக எம்.பி. தொகுதிகளை கைப்பற்ற வேண்டும் என்பதில் பா.ஜ.க. தீவிரமாக உள்ளது.
அந்த மாநிலத்தில் மொத்தம் 17 எம்.பி. தொகுதிகள் உள்ளன. இதில் 10 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்பதை அக்கட்சி இலக்காக வைத்து இருக்கிறது. இதற்காக நேற்று (செவ்வாய்க்கிழமை) பா.ஜ.க. மூத்த தலைவர்கள் பிரமாண்டமான விஜயசங்கல்ப பேருந்து யாத்திரையை தொடங்கி உள்ளனர்.
தெலுங்கானாவில் உள்ள 119 சட்டசபை தொகுதிகளிலும் இந்த யாத்திரை நடக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. யாத்திரையின் ரதங்களை ஊர்வலமாக கொண்டு செல்லவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அடுத்த மாதம் 1-ம் தேதி வரை இந்த ரத யாத்திரை நடைபெற உள்ளது.
இந்த பேருந்து யாத்திரையின்போது மோடி ஆட்சியின் சாதனை மற்றும் தெலுங்கான அரசு நிறைவேற்றாத முக்கிய தேர்தல் வாக்குறுதிகள் ஆகியவற்றை மக்களிடம் கொண்டு சேர்ப்பது முக்கிய நோக்கம் என பா.ஜ.க. தெரிவித்துள்ளது.