இது தெரியுமா ? அசைவ உணவு உட்கொண்ட 1/2 மணி நேரம் கழித்து அன்னாசிப்பழம் சாப்பிட்டால்…

குழந்தைகள் அதிகம் விரும்பி சாப்பிடுவது இனிப்பு வகையான தின்பண்டங்கள், சாக்லேட், அதனால் வயிற்று வலி, கீரைப்பூச்சி போன்ற வயிறு சம்பந்தமான கோளாறுகள் அடிக்கடி ஏற்படும். இதனை சரிசெய்ய, அன்னாசிப்பழ இலையை மைய அரைத்து, ஒரு ஸ்பூன் அளவு அதன் சாறுடன் தேன் கலந்து குடுத்தால், வயிற்று போக்கு ஏற்பட்டு, வயிற்றில் உள்ள பூச்சிகள் வெளியேறிவிடும்.

அசைவ உணவு உட்கொண்ட பிறகு, 1/2 மணி நேரம் கழித்து சிறிதளவு அன்னாசிப்பழம் சாப்பிட்டால், இறைச்சியில் உள்ள புரதசத்து முழுவதும் உறிய செய்து, நன்கு செரிமானம் ஆக உதவும். அன்னாசிப்பழ சாறுடன் நாட்டு சர்க்கரை சேர்த்து ஜூஸ் அருந்தினால், இரும்பு சத்து அதிகரித்து ரத்த சோகை நீங்கும். கருபப்பையில் உள்ள நச்சுக்கள், கழிவுகள், மற்றும் சீரற்ற மாதவிடாய் போன்ற பிரச்சனைகளும் சரிசெய்து, கருபப்பையின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். உடலில் ஏற்படக்கூடிய உடல் அசதி, சோர்வு, உட்புறக்காயம், மற்றும் வெளிப்புற காயம், விரைவில் குணமாகும் ஆற்றல் இப்பழத்திற்கு உண்டு.

பித்தத்தால் ஏற்படும் வாந்தி, பசி மந்தம் நீங்க அன்னாசி ஒரு சிறந்த மருந்தாகும். அன்னாசி பழம் இரத்தத்தை சுத்தம் செய்வதில், ஜீரண உறுப்புகளை வலுப்படுத்துவதில், மலக்குடலைச் சுத்தப்படுத்துவதில் சிறந்தது.உடலில் ஏற்படும் வலியை தீர்க்கும் ஆற்றல் உடைய அன்னாச்சி பழம் பித்தத்தை குறைக்கும் தன்மை உடையது. இதயம் தொடர்பான நோய்களில் இருந்து நம்மை பாதுகாக்கிறது.

அன்னாசிப் பழத்தில் வைட்டமின் பி2 உயிர்ச்சத்து அதிகமாக இருக்கிறது. எனவே, இது உடலில் ரத்தத்தின் அளவை அதிகரிக்கிறது. கண்பார்வை குறைபாடு ஏற்படாமல் தடுக்கிறது.

அன்னாசிப்பழ ஜூஸ் குடிப்பதால் உங்கள் இதய ஆரோக்கியம் மேம்படுகிறது மற்றும் உயர் ரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகிறது. செரிமானத்திற்கு உதவும் ப்ரோமெலைன் எனப்படும் என்சைம்களின் சேர்க்கை அதிகமாக உள்ளது, எனவே இந்த பழத்தின் சாறை குடித்து வர செரிமான திறம் மேம்படுகிறது.

உடலில் புற்றுநோயை உருவாக்கும் செல்கள் மற்றும் புற்றுநோய் கட்டிகள் போன்றவற்றை வராமல் தடுப்பதில் அன்னாசிப்பழ ஜூஸ் முக்கிய பங்கு வகிக்கின்றது.

வைரஸ் மற்றும் பாக்டீரியா போன்ற கிருமிகளால் ஏற்படும் தொற்றுநோய்களை தடுப்பதில் அன்னாசிப்பழ ஜூஸ் பெரும்பான்மையான பங்கினை வகிக்கின்றது.

நன்கு பழுத்த பழத்தை சிறிய சிறிய துண்டுகளாக நறுக்கி, வெயிலில் உலர்த்தி, வற்றல் பதத்திற்கு காயவைக்க வேண்டும். தினமும் இரவு படுப்பதற்கு முன் ஒரு டம்ளர் பாலில் 3-5 துண்டு அன்னாசிப்பழ வற்றலை 1/2 மணி நேரம் உறவைக்கவேண்டும். ஊறவைத்த அன்னாசிப்பழ வற்றலை தொடர்ந்து 40 நாட்கள் வரை சாப்பிட்டுவந்தால் பித்த கோளாறுகள் நீங்கும். அன்னாசிப்பழ வற்றலை பாலில் ஊறவைத்து, வாரத்தில் 2 முறையாவது குடித்துவந்தால், பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைநோய் குணமாகும்.

சர்க்கரை நோயாளிகள், அல்சர் பிரச்சனை உள்ளவர்கள் இப்பழத்தை தவிர்ப்பது நல்லது,

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *