வயிற்றில் 36 ஆண்டுகளாக கருவை சுமந்த ஆண் பற்றி தெரியுமா? இந்தியாவில் நடந்த அதிசயம்!!
ஆண்கள் கர்ப்பம் அடைய முடியுமா என்பது குறித்து ஏராளமான மருத்துவ ஆராய்ச்சிகள் உலகம் முழுவதும் நடந்து வருகிறது. ஆனால் இந்தியாவை சேர்ந்த ஒருவர் 36 ஆண்டுகளாக வயிற்றில் குழந்தையை வைத்திருந்தார். கர்ப்பிணி ஆண் (Pregnant Man) என்று அழைக்கப்பட்ட அந்த நபர் குறித்த விபரங்களை பலரும் அறிந்திருக்க மாட்டார்கள்.
மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் சஞ்சு பகத் என்பவர் 1963 ஆம் ஆண்டு பிறந்தார். முதலில் சாதாரண நபரை போன்று தோற்றம் அளித்த அவர், 20 வயதுக்கு மேல் கர்ப்பம் தரித்த ஆண் போன்று காட்சியளிக்கத் தொடங்கினார். பின்னாளில்தான் அவரது வயிற்றில் அவருடன் பிறந்த ஒருவர் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த நிகழ்வு மிகப்பெரிய அளவில் கடந்த 1999 ஆம் ஆண்டு பேசப்பட்டது.
அதாவது தான் பிறந்ததில் இருந்து தன்னுடன் பிறந்த ஒருவரை தனது வயிற்றில் அவருக்கே தெரியாமல் வைத்திருந்தார் சஞ்சு பகத். இதனை மெடிக்கல் மிராக்கிள் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். 20 வயதுக்கு முன்பு வரை அவரது வயிறு சாதாரணமாக காட்சியளித்தது. அதன்பின்னர், வயிறு திடீரென பெரிதாகத் தொடங்கியதால் அவருக்கும் குடும்பத்தினருக்கும் அதிர்ச்சி ஏற்பட்டது.
முதலில் இதனை அவர் பெரிதாக கவனத்தில் கொள்ளவில்லை. வயிறு வளர வளர ஒரு கட்டத்தில் அவருக்கு மூச்சு விடுவதே சிரமமாக மாறிப்போனது. அதன்பின்னர்தான் அவர் மருத்துவரை அணுகியுள்ளார்.
1999 ஆம் ஆண்டு அவர் மும்பை மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு வயிற்றில் கட்டி ஏதேனும் இருக்கலாம் என்று கருதினார்கள். அறுவை செய்த பார்த்தபோது மருத்துவர்களுக்கு பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது. பகத்தின் வயிற்றிலிருந்து மனித முடி, கிரு உள்ளிட்டவை வெளிவரத் தொடங்கின.
இது தொடர்பாக பேட்டி அளித்த மருத்துவர்கள், ‘ஆபரேஷன் செய்த எங்களுக்கு பெரும் அதிர்ச்சியும், குழப்பமும் ஏற்பட்டது. எங்கள் மருத்துவக் குழுவே குழப்பத்தில் ஆழ்ந்தது’ என்று தெரிவித்தார். சஞ்சு பகத்தின் தாயாருக்கு அவர் உள்பட இரட்டை குழந்தைகள் கருவில் இருந்துள்ளன.
இதில் சஞ்சு பகத் மற்றும் பிறந்துள்ளார். அவருடன் கருவில் இருந்தவர் பகத்தின் வயிற்றிலேயே தங்கியுள்ளார். இவ்வாறு நடப்பது என்பது மருத்துவ உலகில் அரிதான ஒன்று என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். அறுவை சிகிச்சைக்கு பின்னர் சஞ்சு பகத்தின் வயிறு சாதாரண நிலையை அடைந்தது.