வாட்ஸ்அப் சாட் விவரங்களை பாதுகாப்பாக வைத்துக் கொள்வது எப்படி? கைட்லைன்ஸ் இதோ
ஸ்மார்ட்ஃபோன் நம்முடையது தான் என்றாலும் அதை பல நேரங்களில் குடும்ப உறவுகள், நண்பர்கள் என பல தரப்பினரும் எடுத்து பயன்படுத்துவார்கள். அத்தகைய தருணத்தில் சிலர் நோட்டிஃபிகேஷனை ஓப்பன் செய்வது உண்டு. அதே சமயம், ஆன்லைன் ஹேக்கர்கள், இதர மோசடியாளர்கள் மூலமாக உங்கள் வாட்ஸ்அப் சாட் விவரங்களை உளவு பார்க்கவும் வாய்ப்பு இருக்கிறது.
பொதுவாக, எண்டு டூ எண்டு என்கிரிப்ஷன் என்ற பாதுகாப்பு அம்சத்தை வாட்ஸ்அப் நமக்கு வழங்குகிறது. அதனால் நம் மெசேஜ் விவரங்களை வேறு யாரும் பார்க்க முடியாது. இருப்பினும், இதர மோசடி வழிகளில் இருந்து நம்மை தற்காத்துக் கொள்ள என்னென்ன பாதுகாப்பு அம்சங்களை செய்து கொள்ள முடியும் என்பதை இப்போது பார்க்கலாம்.
டூ ஸ்டெப் வெரிஃபிகேஷன்
உங்கள் வாட்ஸ் அப் அக்கவுண்டில் டூ ஸ்டெப் வெரிஃபிகேஷன் பாதுகாப்பு அம்சத்தை ஏற்படுத்திக் கொள்ளலாம். இதைச் செய்யும் பட்சத்தில் உங்கள் வாட்ஸ்அப் சாட் விவரங்களை ஓப்பன் செய்யும்போது 6 நம்பர் கொண்ட பின் நம்பரை உள்ளீடு செய்ய வேண்டியிருக்கும். இதனால் ஸ்கேமர்கள், ஆன்லைன் மோசடியாளர்கள் போன்றவர்களின் மோசடிகளில் இருந்து தப்பிக்கலாம்.
அதிகாரப்பூர்வ ஆப்
வாட்ஸ் அப் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ மற்றும் லேட்டஸ்ட் வெர்சனைதான் நீங்கள் பயன்படுத்துகிறீர்கள் என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். போலியான ஆப்களை பயன்படுத்தினால் அதில் மோசடி நடைபெறுவதற்கு வாய்ப்பு உண்டு.
டிஸ் அப்பியரிங் மெசேஜ்
வாட்ஸ்அப்பில் பிறருக்கு நீங்கள் அனுப்பி வைக்கும் ஃபோட்டோவை ஒருமுறை மட்டுமே பார்க்கும் படியாக அனுப்பி வைக்க இயலும். இதனால் தேவையின்றி உங்கள் ஃபோட்டோ சேமிக்கப்பட மாட்டாது. அதேபோல வாய்ஸ் பதிவுகளுக்கும் ஒருமுறை அனுமதியோடு அனுப்பலாம். மேலும் டிஸ் அப்பியரிங் ஆப்சனை மேம்படுத்தினால் நீங்கள் குறிப்பிடுகின்ற காலம் தாண்டி அந்த மெசேஜ் தாமாகவே மறைந்துவிடும்.
சாட் லாக்
உங்கள் வாட்ஸ்அப்பில் தனிப்பட்ட சாட் விவரங்களை பிரத்யேகமாக லாக் செய்து வைக்க முடியும். அவை தனி ஃபோல்டரில் சேமிக்கப்படும். அதை நீங்கள் மட்டுமே படிக்க முடியும்.
பொறுப்பான அட்மின்
உங்கள் நண்பர்கள் குழு, குடியிருப்பு பகுதி, அலுவலக ஊழியர்கள் போன்ற தரப்பினரைக் கொண்ட வாட்ஸ்அப் குழு ஒன்றை நீங்கள் நிர்வாகம் செய்து வரும் பட்சத்தில், அதில் உங்கள் அனுமதியின்றி வேறு யாரும் இணைந்து விடாதபடி பாதுகாப்பு அம்சத்தை மேம்படுத்தலாம். தேவையற்ற மெசேஜ்களை டெலீட் செய்யலாம்.
மோசடிக்கு எதிரான பாதுகாப்பு
சந்தேகத்துக்குரிய வகையில் மெசேஜ் வந்தால் அதற்கு பதில் அளிக்க வேண்டாம். அதேபோல உங்கள் தனிநபர் விவரங்கள், வங்கிக் கணக்கு விவரங்கள் போன்றவற்றை பகிர்ந்து கொள்ள வேண்டாம்.