இதய ஆரோக்கியத்தை வீட்டில் இருந்தபடியே அறிய உதவும் எளிய சோதனைகள்!!!

நல்ல இதய ஆரோக்கியத்தை பராமரிப்பது நமது ஒட்டுமொத்த நல்வாழ்விற்கு மிகவும் அவசியம். ஒரு சில எளிமையான பரிசோதனைகளை செய்வதன் மூலமாக நமது இதயத்தின் ஆரோக்கியம் எப்படி இருக்கிறது என்பதை நாமே தெரிந்து கொள்ளலாம்.

இந்த பரிசோதனைகள் மருத்துவமனையில் செய்யப்படும் பரிசோதனைகளுக்கு ஈடாகாது என்றாலும் கூட ஆரம்பகால ஒரு சில இதய கோளாறுகளுக்கான அறிகுறிகளை கண்டறிவதற்கு இந்த சோதனைகள் உதவி புரிய வாய்ப்பு உள்ளது. அவ்வாறு வீட்டில் குறைந்தபட்ச கருவிகளை பயன்படுத்தி உங்கள் இதய ஆரோக்கியத்தை தெரிந்து கொள்ள உதவும் 3 எளிய பரிசோதனைகள் பற்றி பார்க்கலாம்.

ஓய்வு நிலை இதயத்துடிப்பு அளவீடு (Resting Heart Rate measurement – RHR)

நீங்கள் ஓய்வு நிலையில் இருக்கும்பொழுது உங்கள் இதயம் ஒரு நிமிடத்திற்கு எத்தனை முறை துடிக்கிறது என்ற அளவீடு இது. பெரும்பாலும் இது காலை நேரத்தில் நீங்கள் எந்தவிதமான உடல் செயல்பாடுகளில் ஈடுபடுவதற்கு முன்பு அளவிடப்படுகிறது. இந்த RHR அளவீடு உங்களுடைய இதயம் மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட மதிப்பு மிக்க தகவல்களை தருகிறது.

RHR அளவிடுவது எப்படி?

ஒரு சில நிமிடங்கள் அமைதியாக ஓய்வு நிலையில் அமரவும்.

உங்களது நாடியை பார்க்க உங்களுடைய மணிக்கட்டின் உட்புறமாகவோ அல்லது கழுத்திற்கு பக்கவாட்டாகவோ கைகளை வைக்கவும்.

கடிகாரம் அல்லது டைமர் பயன்படுத்தி 60 நொடிகளுக்கு உங்கள் இதயத்துடிப்பை கணக்கிடவும் அல்லது 15 வினாடிகளுக்கு கணக்கிட்டு அதனை நான்காக நீங்கள் பெருக்கிக் கொள்ளலாம்.

வழக்கமாக சாதாரண ஓய்வு நிலை இதயத்துடிப்பு என்பது ஒரு நிமிடத்திற்கு 60 முதல் 100 இருக்க வேண்டும். குறைவான ஓய்வு நிலை இதயத்துடிப்பு இருப்பது நல்ல இதய ஆரோக்கியத்தின் ஒரு அறிகுறியாக அமைகிறது. உங்களுடைய ஓய்வு நிலை இதயத்துடிப்பு 100 ஐ தாண்டும் பொழுது அல்லது தொடர்ச்சியாக 60க்கும் குறைவாக இருந்தாலும் உடனடியாக நீங்கள் மருத்துவரை அணுக வேண்டும்.

ரத்த அழுத்த அளவீடு :

ரத்த அழுத்தம் என்பது இதயம் துடிக்கும் பொழுது தமனிகளின் சுவர்களில் ரத்தத்தால் செலுத்தப்படும் விசை. அதிக ரத்த அழுத்தம் இதய நோய் ஏற்படுவதற்கான முக்கியமான ஒரு அபாய அறிகுறி. வழக்கமான முறையில் இரத்த அழுத்தத்தை கண்காணிப்பது உங்கள் இதய ஆரோக்கியத்தை பராமரிப்பதற்கு அவசியம்.

ரத்த அழுத்தத்தை அளவிடுவது எப்படி?

டிஜிட்டல் ரத்த அழுத்த மானிட்டர் அல்லது மேனுவல் ஸ்பைக்மொமெனோமீட்டரை பயன்படுத்தவும்.

அமைதியான ஒரு சூழலில் சௌகரியமாக அமரவும்.

முதுகுக்கு சரியான நிலையில் வைத்து, கால்களை தட்டையாக தரையில் வைக்கவும்.

அளவிடுவதற்கு சாதனத்தில் கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றவும்.

டயாஸ்டாலிக் ரத்த அழுத்த அளவீடுகளை பதிவு செய்யவும்.

சாதாரண ரத்த அழுத்தம் என்பது 120/80 mm hg -க்கும் குறைவாக இருக்க வேண்டும். 130/80 mm hg -க்கும் அதிகமாக இருந்தால் அது உயர் ரத்த அழுத்தத்தை குறிக்கிறது.

இப்படி இருக்க நீங்கள் நிச்சயமாக மேலும் பரிசோதனைக்கு மருத்துவரை அணுக வேண்டும்.

எளிமையான உடல் செயல்பாடு பரிசோதனை உடற்செயல்பாடு இதய ஆரோக்கியத்துடன் நெருங்கிய தொடர்பை கொண்டுள்ளது. உடல் செயல்பாடுகளை செய்வதில் உங்களுக்கு இருக்கக்கூடிய திறனை சில எளிய பரிசோதனைகள் மூலமாக தெரிந்து கொள்ளலாம். இது உங்களது இதய ஆரோக்கிய அளவை கொடுக்கும். பிரிஸ்க் வாக்கிங், ஜாகிங் அல்லது படி ஏறுதல் போன்ற உங்கள் இதயத்துடிப்பை அதிகப்படுத்தக்கூடிய உடல் செயல்பாடுகளில் ஈடுபடவும். இதனை 3 முதல் 5 நிமிடங்களுக்கு செய்யவும். இந்த சமயத்தில் உங்கள் இதய துடிப்பை கண்காணிக்கவும். இந்த செயல்பாட்டின் போது உங்கள் இதய துடிப்பு எவ்வளவு வேகமாக அதிகரிக்கிறது என்பதை கவனியுங்கள்.

மேலும் எவ்வளவு விரைவாக மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்புகிறது என்பதையும் கவனியுங்கள். உங்கள் இதய துடிப்பு உடற் செயல்பாடுகளுக்கு பிறகு உடனடியாக சாதாரண நிலைக்கு மீண்டும் திரும்பி விடுவது நல்ல இதய ஆரோக்கியத்தை குறிக்கிறது. அதுவே ஒரு நீடித்த நேரத்திற்கு உங்கள் இதயத்துடிப்பு அதிகமாகவே இருக்கும் பட்சத்தில் உங்களுக்கு ஏதேனும் இதயம் சம்பந்தப்பட்ட நோய்கள் இருக்கலாம். இது தவிர நெஞ்சு வலி, மூச்சு விடுவதில் சிரமம், மயக்கம் அல்லது பிற சமந்தப்பட்ட அறிகுறிகள் உடல் செயல்பாடுகளின் போதோ அல்லது அதற்கு பின்னர் ஏற்பட்டாலோ உடனடியாக உடற்செயல்பாடுகளை நிறுத்திவிட்டு மருத்துவ உதவியை நாடவும்.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *