தனுஷின் ராயன் அஜித்திற்காக எழுதப்பட்ட கதையா…?
தனுஷின் 50 வது படம் ராயனின் பர்ஸ்ட் லுக் பிப்ரவரி 19 ம் தேதி வெளியானது. சன் பிக்சர்ஸ் தயாரித்திருக்கும் ராயனை தனுஷே இயக்கியுள்ளார். கேங்ஸ்டர் படமாக இது தயாராகியுள்ளது. இதில் காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷன், அபர்ணா பாலமுரளி, நித்யா மேனன், துஷாரா விஜயன், எஸ்.ஜே.சூர்யா உள்பட பலர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
ராயன் படத்தின் கதை அஜித்திற்காக செல்வராகவன் எழுதியது என்ற தகவல் கோடம்பாக்கத்தில் பரவி வருகிறது. புதுப்பேட்டைக்குப் பின் காசிமேடு என்ற படத்தை எடுக்க செல்வராகவன் திட்டமிட்டிருந்தார். இதில் அஜித் அண்ணனாகவும், தம்பியாக தனுஷும், பரத்தும் நடிப்பதாக இருந்தது. ஆனால், இந்த முயற்சி கைகூடவில்லை. அந்தக் கதையை இந்த காலகட்டத்துக்கு ஏற்ப நவீனப்படுத்தி தனுஷ் ராயனாக மாற்றியுள்ளதாக கூறப்படுகிறது.
ராயனில் தனுஷ் அண்ணனாகவும், காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷன் இருவரும் அவரது தம்பிகளாக நடித்திருப்பதாகவும் படக்குழு கூறியுள்ளது. பாஸ்ட்ஃபுட் கடை வைத்திருக்கும் சகோதரர்கள் சந்தாப்ப சூழ்நிலையால் கேங்ஸ்டராவதை ரத்தம் தெறிக்க ராயன் சொல்கிறது. ராயனைத் தொடர்ந்து தற்போது சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் நடித்து வருகிறார். அதையடுத்து, நிலவுக்கு என்னடி என் மேல் கோபம் படத்தை இயக்கி, நடிக்க உள்ளார். அதன் பின் மாரி செல்வராஜ், அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தலா ஒரு படம் நடிக்கிறார்.
அஜித்திற்காக எழுதப்பட்ட காசிமேடு கதைதான் ராயன் என்ற வதந்தி இருந்தாலும், சம்பந்தப்பட்டவர்கள் அதனை இன்னும் உறுதி செய்யவில்லை.