5 நிமிடத்துக்கு ஒரு கார் விற்பனை! தூள் கிளப்பும் ஹூண்டாய் கிரெட்டா சேல்ஸ் புதிய சாதனை!

இந்தியாவில் ஹூண்டாய் கிரெட்டா கார் 2015ஆம் ஆண்டில் அறிமுகமானதில் இருந்து, நடுத்தர அளவிலான SUV கார் வாங்குபவர்களின் விருப்பமான காராக மாறியுள்ளது. உற்பத்தியில் எட்டு ஆண்டுகள் ஆன நிலையில், ஹூண்டாய் கிரெட்டா விற்பனையில் குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டியுள்ளது.

நாடு முழுவதும் 10 லட்சம் ஹூண்டாய் கிரெட்டா கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. அதாவது, தோராயமாக ஒவ்வொரு ஐந்து நிமிடங்களுக்கும் ஒரு கிரெட்டா கார் விற்பனை ஆகிறது.

ஹூண்டாய் கிரெட்டா அதன் பன்முகத்தன்மைக்காக தனித்து நிற்கிறது. பெட்ரோல், டீசல் மற்றும் டர்போசார்ஜ் வேரியண்ட் உட்பட பல எஞ்சின் ஆப்ஷன்களை வழங்குகிறது. அதுமட்டுமின்றி, ஹூண்டாய் நிறுவனம் கிரெட்டாவில் சன்ரூஃப், டச் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், கனெக்டிவிட்டி வசதிகள் எனப் பல தொழில்நுட்ப அம்சங்களைச் சேர்த்துள்ளது.

உட்புறங்களில் பயணிகளுக்கு விசாலமான இருக்கை மற்றும் லக்கேஜ்களுக்கு போதுமான இடம் என தாராளமான குடும்பத்துடன் பயணம் செய்வதற்குத் தேவையான வசதிகள் உள்ளன.

கடைசியாக, இந்த எஸ்யூவியின் விலையும் பட்ஜெட் ரேஞ்சில் கார் வாங்க நினைப்பவர்களுக்கு ஒரு கவர்ச்சிகரமான தேர்வாக அமைகிறது. சமீபத்தில் கிரெட்டா ஃபேஸ்லிஃப்ட் மாடலை ரூ. 11 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆரம்ப விலையில் அறிமுகப்படுத்தியது. இந்த மாடல் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு மாதத்திற்குள் 60,000 க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் முன்பதிவு செய்துவிட்டனர்.

10 லட்சம் கிரெட்டா கார் விற்பனை என்பது ஹூண்டாய் நிறுவனத்தின் சாதனை மட்டும் அல்ல, இந்திய கார் சந்தையில் வாடிக்கையாளர் தேர்வின் பிரதிபலிப்பாகவும் உள்ளது. ஸ்யூவி கார்கள் அதிகளவில் விரும்பப்படும் ட்ரெண்ட் அதிகரித்து வருகிறது என்பது இதன் மூலம் உறுதியாகிறது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *