220 கிமீ ரேஞ்சு பெற்று புதிய ஸ்டைலில் ரெனால்ட் க்விட் எலக்ட்ரிக் அறிமுகமானது
ரெனால்ட் கீழ் செயல்படுகின்ற டேசியா வெளியிட்டுள்ள புதிய ஸ்பிரிங் (Dacia Spring) எலக்ட்ரிக் ஆனது க்விட் இவி (Kwid EV) என்ற பெயரில் விற்பனைக்கு இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. க்விட் இந்தியாவில் பிரபலமான காராக விளங்கும் நிலையில் துவக்கநிலை சந்தைக்கு ஏற்ற எலக்ட்ரிக் மாடலாக வரக்கூடும்.
முந்தைய மாடலை விட முற்றிலும் மேம்பட்ட எஸ்யூவி கார்களுக்கு இணையான தோற்றத்தை கொண்டுள்ள டேசியா ஸ்பிரிங் காரில் 44bhp அல்லது 64bhp என இரண்டு விதமான பவரை வழங்குகின்ற எலக்ட்ரிக் மோட்டார் பொருத்தப்பட்டு 26.8kWh பேட்டரி பேக் ஆப்ஷனை பெற்றதாக வந்துள்ளது.
இரண்டு விதமான பவரை வழங்கினாலும் இந்த காரின் ரேஞ்ச் 220 கிமீ வழங்கும் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 44bhp பவரை வழங்கும் மாடல் அதிகபட்சமாக 11kW (AC) வரை விரைவு சார்ஜ்ரை ஆதரிக்கும் நிலையில், டாப் 64bhp வேரியண்டுகள் 30kW DC விரைவு சார்ஜ்ரை ஆதரவினை பெறுகின்றன. கூடுதலாக 7.4kW ஹோம் வால்பாக்ஸில் சார்ஜ் செய்ய நான்கு மணிநேரமும், வழக்கமான 3 பின் பிளக் மூலம் சார்ஜ் செய்தால் 11 மணிநேரம் ஆகும்.
தோற்ற அமைப்பில் முந்தைய மாடலை விட டேசியா ஸ்பிரிங் மேம்படுத்தப்பட்டாகவும், கிரில் புதுப்பிக்கப்பட்ட எல்இடி ஹெட்லைட் மற்றும் நேர்த்தியான பம்பர் கொடுக்கபட்டுள்ளது. புதிய அலாய் வீல் கொண்டுள்ளது. பின்புறம் Y-வடிவ டெயில் விளக்குகளைப் பெறுவதுடன் மேட் கருப்பு பிளாஸ்டிக் பேனலால் இணைக்கப்பட்டுள்ளன. டேசியா டஸ்ட்டரில் உள்ளதை போன்றே இன்டிரியரை பெற்றதாகவும் டாப் வேரியண்டில் புதிய டிஜிட்டல் கிளஸ்ட்டர் 10.25 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் பெற்றதாக அமைந்துள்ளது.