லொட்டரியில் ஒரு மில்லியன் பரிசு கிடைத்ததும் காதலரைக் கழற்றி விட்ட பெண்: CCTV கமெரா காட்சிகள் முடிவை மாற்றலாம்
பிரித்தானியாவில், லொட்டரியில் ஒரு மில்லியன் பரிசு கிடைத்ததும் தன் காதலரையே கழற்றி விட்டுவிட்டார் ஒரு பெண்.
ஆனால், CCTV கமெரா காட்சிகள் அவரது முடிவை மாற்றக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
லொட்டரியில் பரிசு விழுந்ததும் காதலரைக் கழற்றிவிட்ட காதலி
இங்கிலாந்தின் Spalding என்னுமிடத்தைச் சேர்ந்த மைக்கேல் (Michael Cartlidge, 39) என்பவரும், அவரது காதலியான சார்லட் (Charlotte Cox, 37) என்பவரும், லொட்டரிச்சீட்டு ஒன்றை வாங்கியிருக்கிறார்கள்.
அந்த லொட்டரிச்சீட்டுக்கு ஒரு மில்லியன் பவுண்டுகள் பரிசு விழ, என்ன நினைத்தாரோ தெரியாது, மைக்கேலுக்கு பரிசுப்பணத்தில் பங்கு தரமுடியாது என்று கூறிவிட்டார் சார்லட்.
லொட்டரிச்சீட்டு வாங்கச் சொல்லியதே நான்தான் என்கிறார் மைக்கேல், இல்லை, மைக்கேல் உளறுகிறார், நான்தான் லொட்டரிச்சீட்டுக்கு பணம் கொடுத்தேன் என்கிறார் சார்லட்.
தான் சார்லட்டை லொட்டரிச்சீட்டு ஒன்று வாங்குமாறு கூறியதாகவும், அவர் லொட்டரிச்சீட்டு வாங்குவதற்கெல்லாம் தன்னிடம் பணம் இல்லை என்று கூறியதாகவும், நீ வாங்கு, நான் என்னிடமுள்ள பணத்தை உனக்கு ட்ரான்ஸ்ஃபர் செய்கிறேன் என தான் கூறியதாகவும் கூறும் மைக்கேல், தான் உடனே தன் வங்கிக்கணக்கிலிருந்து சார்லட்டுக்கு பணம் அனுப்பியதாகவும் கூறுகிறார்.
காதலி மறுப்பு
ஆனால், மைக்கேல் ஏதோ உளறுகிறார், நான்தான் லொட்டரிச்சீட்டுக்கு பணம் கொடுத்தேன். ஆகவே, அது என் பணம் என்கிறார் சார்லட்.
இவையெல்லாம் நடந்தபோது, சார்லட் வீட்டில்தான் தங்கியிருந்திருக்கிறார் மைக்கேல். ஆகவே, தன் நண்பர்கள் சிலர் மூலம், மைக்கேலை தன் வீட்டை விட்டு வெளியேறச் சொல்லிவிட்டார் சார்லட்.
முதலில் பணத்தை இருவருமாக பிரித்துக்கொள்ளுங்கள் என லொட்டரி நிறுவனம் கூறியிருந்த நிலையில், இம்மாதம் 10ஆம் திகதி, அந்த லொட்டரி நிறுவனத்தை ஆல்வின் என்னும் ஒருவர் பொறுப்பெடுத்துக்கொண்டுள்ளார்.
அவர், பிரச்சினையை ஏற்படுத்திய லொட்டரிச்சீட்டை வாங்கிப்பார்த்துவிட்டு, அதன் பின்னால் சார்லட்டின் பெயர் எழுதியிருப்பதைக் கண்டு, விதிப்படி, லொட்டரிச்சீட்டின் பின்னால் யார் பெயர் எழுதியிருக்கிறதோ, அவர்தான் அதன் உரிமையாளர். ஆகவே, பரிசுத்தொகை சார்லட்டுக்குத்தான் என்று கூறிவிட்டார்.
CCTV கமெரா காட்சிகள் முடிவை மாற்றலாம்
இந்நிலையில், மைக்கேலும் சார்லட்டும் லொட்டரி வாங்கும் காட்சிகள் கடையிலுள்ள CCTV கமெராவில் பதிவாகியுள்ளன. அந்தக் கடையில் உதவியாளராக பணியாற்றும் ஒரு பெண், CCTV கமெரா காட்சிகள், யாருக்கு பரிசுப் பணம் என்பதைக் குறித்த முடிவை மாற்றலாம் என்று கூறியுள்ளார்.
அந்தப் பெண் தான் மைக்கேல், சார்லட்டுக்கு அந்த லொட்டரிச்சீட்டை விற்றுள்ளார். அவர்கள் இருவரும் தங்கள் கடையில் வழக்கமாக லொட்டரிச்சீட்டு வாங்குபவர்கள் என்று கூறியுள்ள அந்தப் பெண், கடையிலுள்ள CCTV கமெராவில் பதிவாகியுள்ள காட்சிகள், மைக்கேல், தான் லொட்டரிச்சீட்டுக்கு மொபைல் மூலம் பணம் அனுப்பியதற்கு ஆதாரமாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
அவர் பணம் அனுப்பியதை தன்னிடன் காட்டும் காட்சிகள் கமெராவில் பதிவாகியுள்ளதாக தெரிவித்துள்ளதுடன், மைக்கேல் தான் பணம் அனுப்ப முயன்றதாக கூறியுள்ளதை தான் ஆதரிப்பதாகவும் தெரிவித்துள்ளார் அந்தப் பெண்.
தான் யார் பக்கமும் இல்லை என்று கூறும் அந்தப் பெண், அவர்கள் இருவரையுமே எனக்குப் பிடிக்கும். ஆனாலும், அவர்கள் இருவரும் பரிசுப்பணத்தை சரிபாதியாக பிரித்துக்கொள்வதுதான் நியாயம் என்கிறார்.
ஒருவரிடமிருந்து அரை மில்லியன் பவுண்டுகளை திருடிவிட்டு உங்களால் நிம்மதியாக வாழமுடியுமா, என்னால் முடியாது என்கிறார் அந்தப் பெண்.