இந்த எல்.ஐ.சி திட்டத்தில் இரட்டை பலன்கள்: நோட் பண்ணுங்க!
எல்ஐசி பல்வேறு முதலீட்டு திட்டங்களை வழங்குகிறது. அனைத்தும் வெவ்வேறு வகை மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.
அந்த வகையில், பீமா ஜோதி திட்டம் அதன் வாடிக்கையாளர்களின் பல்வேறு தேவைகளைப் பூர்த்தி செய்யும் நிதித் தீர்வுகளை வழங்குவதற்காக உருவாக்கப்பட்டுள்ளது.
இதில், உத்தரவாதமான வருமானம் மற்றும் சேமிப்பு, பாதுகாப்பு ஆகியவை கிடைக்கிறது. மேலும், எல்ஐசி பீமா ஜோதி திட்டம் என்பது இணைக்கப்படாத, பங்கேற்காத தனிநபர் ஆயுள் காப்பீட்டுத் திட்டமாகும்.
வருமானம்
பீமா ஜோதி திட்டத்தில் உள்ள முதலீட்டாளர்கள் தங்கள் முதலீட்டில் கணிசமான வருமானத்தைப் பெற உள்ளனர், ஒவ்வொரு ரூ. 1,000 முதலீட்டிற்கும் ரூ. 50 ஆண்டு வருமானமாக கிடைக்கும்.
திட்டத்தின் சிறப்பம்சங்கள்
- குறைந்தபட்ச உத்தரவாதத் தொகை 1 லட்சம் ரூபாய்.
- உறுதியளிக்கப்பட்ட தொகையில் அதிகபட்ச வரம்பு இல்லை.
- பாலிசி காலம் 15 முதல் 20 ஆண்டுகள் வரை.
- முதல் 5 ஆண்டுகளுக்கு ஆரம்ப கட்டாய முதலீடு.
- பாலிசி வாங்குவதற்கான வயது தகுதி 90 நாட்கள் முதல் 60 ஆண்டுகள் வரை.
இதில் முதலீட்டாளர்கள் மாதாந்திர, காலாண்டு, அரையாண்டு அல்லது வருடாந்திர பிரீமியம் செலுத்தும் முறைகள் மூலம் பீமா ஜோதி திட்டத்தில் முதலீடு செய்யலாம்.