தலை கீழாக தான் குதிப்பேன்! தோல்வி அடைந்தாலும், எங்க ஸ்டைல் மாறாது.. இங்கிலாந்து வீரர் திமிர் பேச்சு

இந்தியா இங்கிலாந்து அணிக்கு இடையிலான நான்காவது டெஸ்ட் போட்டி வரும் வெள்ளிக்கிழமை ராஞ்சியில் நடைபெறுகிறது. இந்த தொடருக்காக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இங்கிலாந்து அணி டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிரடியாக விளையாடுகிறேன் என்ற பெயரில் தற்போது அடுத்தடுத்து தோல்வியை தழுவி வருகிறது. இங்கிலாந்துக்கு அதிரடியாக விளையாடும் பேஸ் பால் டெக்னிக் சில போட்டிகளில் கை கொடுத்தாலும் இந்தியாவுக்கு எதிராக பெரிய பலனை அந்த அணிக்கு அளிக்கவில்லை.

இந்த நிலையில் ஜெய்ஹிந்த் படத்தில் கவுண்டமணி சொல்வது போல் நாங்கள் தலைகீழாக தான் குதிப்போம் என்று இங்கிலாந்து வீரர்கள் தெனாவட்டாக பேசி வருகிறார்கள். ராஞ்சியில் செய்தியாளரிடம் பேசிய இங்கிலாந்து அணியின் நடு வரிசை பேட்ஸ்மேன் ஆலி போப் நான்காவது டெஸ்ட் போட்டியில் பும்ரா இல்லாததை இந்திய வீரர்கள் நிச்சயம் மிஸ் செய்வார்கள்.

ஆனால் இதற்காக எங்களுடைய அணுகு முறையில் இந்த மாற்றமும் இருக்காது. முகமது சிராஜும் நன்றாக பந்து வீசி கடந்த போட்டியில் விக்கெட்டுகளை எடுத்தார். எனினும் எங்களுடைய பேட்டிங் அணுகு முறையில் எந்த மாற்றமும் இருக்காது. நாங்கள் எப்படி விளையாடினோமோ அதே போல் தான் தொடர்ந்தும் நான்காவது டெஸ்டில் விளையாடுவோம். பந்து ரிவர்ஸ்விங் ஆக நல்ல வாய்ப்பு இருக்கிறது.

இந்திய அணியில் சில வீரர்களும் ரிவர்ஸ் ஸ்விங் செய்யக்கூடியவர்கள் இருக்கிறார்கள். பென் ஸ்டோக்ஸ் பந்துவீச்சு பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். அவர் பந்து வீச வாய்ப்பு இருக்கிறது. எனினும் ஸ்டோக்ஸ் இது குறித்து எங்களிடம் உறுதிப்படுத்தவில்லை. அவருடைய உடல் தகுதியை வைத்து தான் அதை முடிவு செய்வோம். ராஜ்காட் டெஸ்ட் போட்டியில் கடைசி இரண்டு நாட்களில் நாங்கள் விளையாடிய விதம் எனக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை கொடுத்தது.

நாங்கள் தோல்வியை தழுவினாலும் எங்கள் அணியின் உத்வேகத்தை அது பாதிக்கவில்லை. நாங்கள் மனதளவில் புத்துணர்ச்சியுடன் இருக்கின்றோம். அடுத்த சவாலுக்கு நாங்கள் தயாராகி விட்டோம். மூன்றாவது டெஸ்டில் எங்களுடைய பிளானை சரியாக நடைமுறைப்படுத்த வில்லையே என்ற விரக்தியில் மைதானத்தை விட்டு சென்றோம். நான்காவது டெஸ்ட் க்கு ஒரு சுவாரசியமான ஆடுகளத்தை தயார் செய்து இருக்கிறார்கள்.

ஆடுகளம் ஒரு பகுதியில் விரிசல் விட்டிருக்கிறது. மற்றொரு பகுதி நன்றாக இருக்கிறது. இதனால் நான்காவது டெஸ்டில் என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். என்னை கேட்டால் இந்தியா கூடுதலாக ஒரு சுழற் பந்துவீச்சாளர் வைத்து விளையாட அதிக வாய்ப்பு இருக்கிறது. அக்சர் பட்டேல் மீண்டும் அணிக்கு வர இருக்கிறார். ஆடுகளத்தில் அவர்கள் தண்ணீரை நன்றாக பாய்ச்சு இருக்கிறார்கள். இதனால் இந்திய அணி நான்கு சுழற் பந்துவீச்சாளர்களை வைத்து விளையாடினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என ஆலி போப் கூறியுள்ளார்.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *