”உலகின் தலைசிறந்த முன்னாள் காதலி” – 2,00,00,000 மதிப்புள்ள காரினை பரிசளித்த பெண்! வைரலாகும் வீடியோ

அவுஸ்திரேலிய டிக் டோக் பிரபலம் ஒருவரின் முன்னாள் காதலி, விலையுயர்ந்த கார் ஒன்றினை பிறந்தநாள் பரிசாக கொடுத்தது பேசு பொருளாகியுள்ளது.

அன்னா பெல் எனும் அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த இளம்பெண் TikTok பிரபலமாக வலம் வருகிறார்.

24 வயதாகும் இவர் க்ளென் தாம்சன் என்ற தனது காதலரை பிரிந்துவிட்டார். ஆனாலும் அவரது பிறந்தநாளுக்கு பரிசளிக்க விரும்பியுள்ளார் அன்னா.

அதற்காக அவர் பாரிய அளவிலான தொகையை செலவு செய்துள்ளார். அதாவது Nissan Skyline GT-R R33 எனும் காரினை முன்னாள் காதலருக்கு பரிசளித்துள்ளார்.

இந்த காரின் விலை 4,00,000 அவுஸ்திரேலிய டொலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் 2 கோடி ரூபாய்) ஆகும். க்ளென் தாம்சன் இந்த பரிசினை சற்றும் எதிர்பார்க்கவில்லை. காரினை கண்டதும் ஆச்சரியமும், மகிழ்ச்சியும் அடைந்தார்.

இந்த நிலையில் அன்னா பெல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உற்சாகமாக பதிவிட்டுள்ளார்.

https://www.instagram.com/p/C3dvgigS9Xs/?utm_source=ig_web_copy_link

 

அதில், ‘உலகின் சிறந்த முன்னாள் காதலி’ என குறிப்பிட்ட அவர், நான் அவரது கனவு காரில் உடன் இருக்கிறேன். க்ளெனை விட வேறு யாரும் அதற்கு தகுதியானவர் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

அவர் க்ளென் உடன் காரில் பயணிக்கும் வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகியுள்ளது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *