பிரித்தானியாவில் வீடு திரும்பும் வழியில் கோர சம்பவம்… இந்திய உணவக மேலாளருக்கு நடந்த துயரம்
பிரித்தானியாவில் இந்திய உணவ மேலாளர் ஒருவர் தமது மிதிவண்டியில் வீடு திரும்பும் நிலையில், சாலை விபத்தில் சிக்கி பரிதாபமாக மரணமடைந்துள்ளார்.
8 பேர்கள் கைது
குறித்த சம்பவத்தை கொலை வழக்காக பதிவு செய்துள்ள பொலிசார், தற்போது சந்தேகத்தின் அடிப்படையில் 8 பேர்களை கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரீடிங் பகுதியில் அமைந்துள்ள இந்திய உணவகத்தில் பணி முடித்து வீடு திரும்பியுள்ளார். பிப்ரவரி 14ம் திகதி நடந்த இச்சம்பவத்தில், 36 வயதான Vignesh Pattabhiraman குற்றுயிராக மீட்கப்பட்டு, ராயல் பெர்க்ஷயர் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டதை அடுத்து, காயங்கள் காரணமாக சிகிச்சை பலனின்றி அவர் மரணமடைந்துள்ளார்.
இந்த நிலையில், சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட 24 வயதான ஷாஸெப் காலித், கொலைக் குற்றஞ்சாட்டப்பட்டு புதன்கிழமை ரீடிங் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
உதவ முன்வர வேண்டும்
இந்த வழக்கில், குற்றவாளிக்கு உதவியதாக கூறி கைது செய்யப்பட்ட 7 பேர்கள், விசாரணைக்கு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
பட்டாபிராமனின் மரணம் தொடர்பில் தொடர்ந்து விசாரணை முன்னெடுத்து வருவதாகவும், கைது நடவடிக்கைகளும் நடந்துள்ளதாக குறிப்பிட்டுள்ள பொலிசார், இந்த வழக்கில் தகவல் தெரியவரும் பொதுமக்கள், விசாரணை அதிகாரிகளுக்கு உதவ முன்வர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.