நடிகை கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்.. கொள்ளை அழகால் குவியும் லைக்குகள்!
தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகை கீர்த்தி சுரேஷின் தற்போதைய புகைப்படங்கள் இணையதளத்தில் காட்டு தீ போல் பரவி வருகின்றது.
நடிகை கீர்த்தி சுரேஷ்
தமிழில் இது என்ன மாயம் என்ற திரைப்படத்தில் அறிமுகமானவர் தான் கீர்த்தி. அந்தப் படத்தில் அறிமுகமாகியிருந்தாலும் அவரை பலரும் பார்த்து ரசித்தது சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடித்த ரஜினி முருகன் திரைப்படம் தான்.
அதனைத்தொடர்ந்து அடுத்தடுத்து வந்த வாய்ப்புகள் எல்லாம் பெரிய இடமாகத்தான் இருந்தது. விஜய், ரஜினிகாந்த் என உச்ச நடிகர்களுடன் நடிக்க ஆரம்பித்து தேசிய விருது பெரும் அளவிற்கு உயர்ந்தார்.
தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள மொழி படங்களில் நடித்த கீர்த்திக்கு எல்லா மொமிகளிலும் பெரிய அளவிலான ரசிகர் பட்டாளமே இருக்கின்றது.
இன்னும் திருமணம் ஆகாத இளம் நடிகைகளுள் ஒருவர், கீர்த்தி. கடைசியாக சைரன் படத்தில் நடித்திருந்தார்.
சினிமாவில் மாத்திரமன்றி சமூக வலைத்தளங்களிலும் ஆர்வமாக இருக்கும் இவர் தற்போது தன்னுடைய சில போட்டோக்களை சமூகவளைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். குறித்த புகைப்படங்கள் தற்போது இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றது.