முன்னாள் காதலரை கண்டும் காணாமல் செல்லும் நடிகை கரீனா கபூர்: வைரல் வீடியோ
நடிகை கரீனா கபூர் தனது முன்னாள் காதலரை கண்டும் காணாமல் சென்றுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
கரீனா கபூர் – ஷாஹித் ஜோடி கடந்த 2004-ம் ஆண்டு காதலில் விழுந்தது. மூன்று வருடங்கள் டேட் செய்து வந்தனர், பின்னர் கருத்து வேறுபாடுகளால் இருவரும் பிரிந்தனர்.
அதன் பிறகு கரீனாவுக்கு நடிகர் சைஃப் அலிகானுடன் கடந்த 2012-ல் திருமணம் நடந்தது. கரீனா தற்போது இரண்டு குழந்தைகள் உள்ளன.
இந்நிலையில், மும்பையில் நேற்று இரவு இந்த ஆண்டிற்கான தாதா சாகேப் பால்கே சர்வதேச திரைப்பட விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. இ
தில் நடிகை கரீனா கபூரும் கலந்து கொண்டார். அப்போது ரெட் கார்பெட்டில் நடிகர் ஷாஹித் கபூர் இயக்குநர்கள் ராஜ், டிகேவுடன் நின்றிருந்தார்.
அப்போது அங்கு வந்த கரீனா கபூர் இயக்குநர்கள் ராஜ், டிகேவைப் பார்த்து கையசைத்துச் சென்றார். ஆனால், அவர்களுடன் நின்றிருந்த தனது முன்னாள் காதலர் ஷாஹித்தைக் கண்டும் காணாமல் கடந்து சென்றார்.
இந்த வீடியோவை இணையத்தில் பார்க்கும் ரசிகர்கள், கரீனா வேண்டும் என்றே ஷாஹித்தைப் புறக்கணித்துள்ளார் எனக் கூறி வருகின்றனர்.