ரேஷன் அட்டைதாரர்கள் அனைவருக்கும் ரூ.5 லட்சம் காப்பீடு : மாநில அரசு முடிவு..!
பீகார் மாநில முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் அமைச்சரவை கூட்டமானது பிப்ரவரி மாதம் 21ம் நாள் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு பிறகு துணை முதல்வர் சாம்ராட் சவுத்ரி, ஆயுஷ்மான் பாரத் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா (AB PM – JAY) திட்டத்தை மாநில அரசானது புதிதாக அறிமுகப்படுத்தியுள்ளதாக கூறினார். மேலும் “இது பீகாரில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு எடுத்த பெரிய முடிவு என்றும் தெரிவித்தார்.
இந்த AB PM – JAY திட்டத்தின் மூலம் அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் ஒவ்வொரு ஆண்டும் ரூ 5 லட்சம் வரை இலவச சிகிச்சை அளிக்கப்படும். தற்போது வரை இத்திட்டத்தை 1.2 கோடி மக்கள் பயன்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. இந்த திட்டத்தில் கூடுதலாக தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் பயன்பெறும் 58 லட்சம் மக்கள் இணைக்கப்பட உள்ளார்கள். இதன் பின் சுமார் இரண்டு கோடி மக்கள் AB PM – JAY திட்டத்தின் கீழ் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.