கேரளா ஆளுநர் பகீர் குற்றச்சாட்டு..! தீவிரவாத அமைப்புக்கு உதவுகிறார் முதல்வர் பினராயி..!

கேரள ஆளுநர் ஆரிஃப் முகமது கான் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: கேரள அரசு ஜனநாயகத்தை மதிக்கவில்லை. ஜனநாயகத்திற்கு எதிராக செயல்படுகிறது. உதாரணத்திற்கு, பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தின் கீழ் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா என்ற அமைப்பு தடை செய்யப்பட்டது. அவ்வாறு தடை செய்யப்பட்ட அந்த அமைப்புக்கு முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான கேரள அரசு உதவி வருகிறது. பிஎஃப்ஐ அமைப்புக்கு இரவிலும், எஸ்எஃப்ஐ எனப்படும் இந்திய மாணவர் சங்கத்திற்கு பகலிலும் கேரள அரசு மறைமுகமாக உதவி செய்து வருகிறது.”

கடந்த மாதம் நான் கொல்லம் மாவட்டத்திற்கு காரில் சென்றபோது, எஸ்எஃப்ஐ அமைப்பைச் சேர்ந்தவர்கள் கருப்புக் கொடி காட்டி ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது, போராட்டம் நடத்தியவர்களைக் கைது செய்ய வேண்டும் என சாலையில் நாற்காலி போட்டு அமர்ந்து போராட்டம் நடத்தினேன். ஆனாலும், போலீஸார் தங்களது கடமையை சரிவரச் செய்யவில்லை.

இரண்டு நாட்களுக்கு முன் நான் கண்ணூர் சென்றபோதும் போராட்டம் நடத்தினர். எனக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மாணவர்கள் அல்ல. அவர்கள் எனக்கு எதிராக போராட்டம் நடத்துவதற்காக வரவழைக்கப்பட்டவர்கள். என்னால் இப்போது ஆதாரங்களைக் கூறமுடியாது. ஆனால், மத்திய புலனாய்வு நிறுவனங்களுக்கு இதுபற்றிய தகவல்கள் தெரியும். எஸ்எஃப்ஐ மற்றும் பிஎஃப்ஐ அமைப்பினர் நடத்தும் போராட்டங்களுக்கு நான் பயப்படமாட்டேன். இவ்வாறு அவர் கூறினார்.

இதனிடையே, எஸ்எஃப்ஐ மற்றும் பிஎஃப்ஐ அமைப்புகளுக்கு எதிராக கேரள ஆளுநர் விரைவில் கடும் நடவடிக்கை எடுக்க உள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. இது அம்மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கெனவே அரசுக்கும், ஆளுநருக்கும் இடையேயான மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், தற்போது ஆளுநர் இவ்வாறு நேரடியாக குற்றம்சாட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *