சிங்கார சென்னையை மேம்படுத்தும் அசத்தல் பட்ஜெட்..!
சென்னை மாநகராட்சியின் மேயர் பிரியா அவர்கள் 2024 – 25 ஆம் நிதி ஆண்டுக்கான சென்னை மாநகராட்சிக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று நடந்தது. இதில் 82 புதிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது. குறிப்பாக மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு அடையாள அட்டை வழங்க 61 லட்சம் நிதி ஒதுக்கீடு, திறமையான மாணவர்களை தேர்வு செய்து அவர்களுக்கு STEM பயிற்சி வழங்க ரூபாய் ஒரு கோடி நிதி ஒதுக்கீடு, குறிப்பிட்ட பள்ளிகளை தேர்வு செய்து பச்சை வண்ண பலகைகளை வழங்க ரூபாய் 92.95 லட்சம் நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் சைதாப்பேட்டை மருத்துவமனையில் கூடுதல் வசதிகளுக்காக ரூபாய் 7 கோடி நிதி ஒதுக்கீடும், 200 வார்டு உறுப்பினர்களுக்கும் டேப் வழங்குவதற்கு ரூபாய் ஒரு கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதேபோல சென்னை பள்ளிகளில் பயின்று வரும் மாணவ மாணவிகளின் இடைநிற்றலை தவிர்க்கும் வகையில் மாணவர்களின் வருகை பதிவை 95 சதவீதத்திற்கும் மேல் உயர்த்தும் பள்ளிகளுக்கு “EXCELLENT SCHOOL’ என்று பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும். மேலும் சென்னை மாநகராட்சியில் பல்வேறு திட்டங்களின் கீழ் சாலைகள், நடைபாதைகள் மேம்படுத்தும் பணிக்கு ரூபாய் 44 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக பட்ஜெட் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய அம்சங்கள்:
> மாநகராட்சி பள்ளி மாணவர்களை சுற்றுலா அழைத்துச் செல்ல ரூ 45 லட்சம் ஒதுக்கீடு.
> எல்கேஜி முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு தலா 2 சீருடை வழங்க ரூ. 8.50 கோடி ஒதுக்கீடு.
> 255 பள்ளிகளில் சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த ரூ.7.46 கோடி ஒதுக்கீடு.
> சென்னை பள்ளி மாணவர்களுக்கு காலணிகள் வழங்கப்படும். இதற்காக ரூ.3.59 கோடி ஒதுக்கீடு.
> பள்ளி மாணவர்களுக்கு அடையாள அட்டை வழங்க ரூ.61 லட்சம் ஒதுக்கீடு.
> சென்னை ராயப்பேட்டையில் மாநகராட்சியின் கீழ் செயல்படும் தொழிற்பயிற்சி நிலையத்தை மேம்படுத்த ரூ.3 கோடி ஒதுக்கீடு.
> 419 சென்னை பள்ளிகளில் உடனடி பழுது பார்க்கும் வகையில் ரூ.1.32 கோடி நிதி ஒதுக்கீடு.
> திறமைமிக்க மாணவர்களை தேர்வு செய்து அவர்களுக்கு STEM பயிற்சி வழங்க ரூ.1 கோடி ஒதுக்கீடு.
> 338 பள்ளிகளுக்கு ஐந்து பச்சை வண்ண பலகைகளை வழங்க ரூ.92.95 லட்சம் ஒதுக்கீடு செய்யப்படும்.
> சைதாப்பேட்டை மருத்துவமனையில் கூடுதல் வசதிகளை ஏற்படுத்த ரூ.7 கோடி ஒதுக்கீடு.
> சென்னையின் 200 வார்டுகளிலும் பெண்களுக்கு பிரத்யேக உடற்பயிற்சிக் கூடம் அமைக்கப்படும். இதற்காக ரூ. 10 கோடி நிதி ஒதுக்கீடு.
> சென்னையில் 8 நீர்நிலைகளை ரூ.10 கோடி செலவில் புனரமைக்க திட்டம்.
> வார்டு உறுப்பினர் மேம்பாட்டு நிதி ரூ.45 லட்சமாக வழங்கப்படுகிறது.
> 200 வார்டு உறுப்பினர்களுக்கும் டேப் கணினி வழங்கப்படும். இதற்காக ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு