இது தெரியுமா ? தினமும் 5 ஊற வைத்த உலர் திராட்சை சாப்பிட்டு வந்தால்…
நம்மில் பலர் குடும்பம், வேலை, குழந்தைகள் என பொறுப்புகளை சிறப்பாக செயலாற்றும் பொழுது, ஆரோக்கியத்தை பற்றி மறந்து விடுகிறோம். வேலைகள் ஆயிரம் இருந்தாலும் சரியான நேரத்தில் சாப்பிடுவதையும், தூங்குவதையும் எதற்காகவும் சமரசம் செய்யாதீர்கள். உடல் பலவீனம் அடையாமல் இருக்க ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுங்கள்.
தினமும் 5 உலர் திராட்சையை தண்ணீரில் ஊற வைத்து மறுநாள் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடலாம். இந்த பழக்கத்தை நீங்கள் தினமும் கடைப்பிடித்து வந்தால் ஏராளமான நன்மைகளை பெறலாம்.
5-7 உலர் திராட்சையை இரவு முழுவதும் தண்ணீரில் ஊற வைக்கவும்.மறுநாள் காலையில் இதை வெறும் வயிற்றில் எடுத்துக் கொள்ளவும்.இதற்குப் பிறகு அரை மணி நேரத்திற்கு எந்த உணவையும் சாப்பிட வேண்டாம்.இதைத் தொடர்ந்து ஒரு மாதத்திற்கு பின்பற்றினால் சிறந்த விளைவுகளை காண முடியும்.
ஊற வைத்த உலர் திராட்சையில் வைட்டமின்கள், தாதுக்கள், ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், இரும்புச் சத்து, கால்சியம், மெக்னீசியம், பொட்டாசியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இவை யாவும் பெண்களுக்கு அதிக நன்மைகளை தரக்கூடியவை.
இன்றைய வாழ்க்கை சூழலில், பல பெண்களும் இரும்புச்சத்து குறைபாட்டால் அவதிப்படுகிறார்கள். உடல் அசதி, தலைவலி, பலவீனம், மயக்கம் போன்ற பல அறிகுறிகளை நாம் புறக்கணிக்கிறோம். இவை இரும்புச் சத்து குறைபாட்டின் அறிகுறிகளாகவும் இருக்கலாம்.
இரும்புச்சத்து குறைபாட்டை போக்க தினமும் 5 உலர் திராட்சையை இரவு முழுவதும் தண்ணீரில் ஊற வைத்து, மறுநாள் காலையில் தண்ணீருடன் சேர்த்து உலர் திராட்சையையும் சாப்பிடலாம்.
உலர் திராட்சையில் நிறைந்துள்ள கால்சியம் சத்துக்கள் எலும்புகளை வலுப்படுத்த உதவுகின்றன.
உலர் திராட்சை இதய ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இதை ஊற வைத்து சாப்பிட்டு வர இருதய நோயின் அபாயத்தையும் பெருமளவு குறைக்கலாம்.
ஒரு சில பெண்களுக்கு மாதவிடாய் நாட்களில் அதிகப்படியான வலி இருக்கும். மேலும் ஒரு சிலருக்கு ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சியும் இருக்கலாம். மாதவிடாய் சார்ந்த இந்த இரண்டு பிரச்சனைகளுக்கும் ஊறவைத்து உலர் திராட்சை நன்மை தரும்.
உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் தினமும் காலையில் 5 ஊற வைத்த உலர் திராட்சையை வெறும் வயிற்றில் எடுத்துக் கொள்ளலாம்.
. உலர் திராட்சை ஊறை வைத்த நீரை குடிப்பதால் நம் உடலுக்கு கிடைக்கும் 5 நன்மைகள் இதோ…
புளித்த ஏப்பங்களையும் பிற வயிற்று பிரச்சனைகளையும் தடுக்கிறது : உலர் திராட்சை நீரை குடிப்பதால் பல வயிற்று பிரச்சனைகளை சரி செய்யலாம். இதில் இருக்கும் அழற்சி எதிர்ப்பு பண்புகள், நமது குடலின் செயல்பாட்டை மேம்படுத்துவதோடு குடலில் உள்ள பாக்டீரியாக்களையும் கட்டுப்படுத்துகிறது. ஆகவே தினமும் உலர் திராட்சை ஊற வைத்த நீரை குடிப்பது உங்கள் செரிமான அமைப்பிற்கு மிகவும் நல்லது.