IND vs ENG : 4வது டெஸ்டை பார்க்க தோனி வருவாரா? இந்திய வீரர்களை சந்திக்கும் தல.. ட்விஸ்ட் இருக்கு!

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4வது டெஸ்ட் போட்டியில் ராஞ்சி மைதானத்தில் நடப்பதால், இந்த போட்டியை காண தோனி நேரில் வருவாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4வது டெஸ்ட் போட்டி நாளை ராஞ்சி மைதானத்தில் தொடங்கவுள்ளது. ஐதராபாத் மைதானத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியும், விசாகப்பட்டினம் மற்றும் ராஜ்கோட் மைதானங்களில் நடந்த டெஸ்ட் போட்டியை இந்திய அணி வென்றுள்ளன. இதனால் டெஸ்ட் தொடரில் 2-1 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை பெற்றுள்ளது.

இந்த நிலையில் ராஞ்சி மைதானத்தில் நடக்கவுள்ள 4வது டெஸ்ட் போட்டியை வெல்வதில் இரு அணிகளும் தீவிரமாக உள்ளன. இந்த போட்டியை இந்திய அணி வென்றால், டெஸ்ட் தொடரை வெல்ல முடியும். ஆனால் இங்கிலாந்து அணி வென்றால், தொடரின் சுவாரஸ்யம் அடுத்த கட்டத்திற்கு நகரும். ஏனென்றால் இரு அணிகளும் தலா 2 டெஸ்ட் போட்டியில் வென்றால், கடைசி போட்டி டிசைடர் போட்டியாக அமையும்.

இதனால் ராஞ்சி மைதானத்தில் இரு அணிகளை சேர்ந்த வீரர்களும் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். 3வது டெஸ்ட் போட்டியில் களமிறங்கிய இந்திய அணியில் பும்ராவுக்கு மட்டும் ஓய்வு வழங்கப்பட்டுள்ளதால், 4வது போட்டியில் முகேஷ் குமார் அல்லது ஆகாஷ் தீப் இருவரில் ஒருவர் பிளேயிங் லெவனில் இடம்பிடிப்பார் என்று பார்க்கப்படுகிறது.

இதனிடையே தோனியின் சொந்த மண்ணில் நடக்கும் டெஸ்ட் போட்டியை காண நேரில் வருவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏனென்றால் கடந்த ஆண்டு ராஞ்சி மைதானத்தில் நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 போட்டியில் இந்திய அணி விளையாடியது. அப்போது ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய அணியை தோனி நேரில் சந்தித்து சில மணி நேரங்கள் உரையாடினார்.

அதேபோல் ஐபிஎல் தொடருக்கான பேட்டிங் பயிற்சியை ராஞ்சி மைதானத்தில் தான் தோனி மேற்கொண்டு வருகிறார். இதனால் டெஸ்ட் போட்டியை நேரில் பார்க்க வரவில்லை என்றாலும், இந்திய வீரர்களை நிச்சயம் சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் சிஎஸ்கே ரசிகர்கள் இந்திய அணியின் ஓய்வறையில் தோனியை மீண்டும் பார்க்க ஆவலாக உள்ளனர்.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *