கரண்ட் பில் மட்டும் ரூ.20000 கோடி.. இந்தியாவிலேயே பெரிய கை இவங்க தான்..!
மின்சார மேல்முறையீட்டு தீர்ப்பாயம் கடந்த வாரத்தில் இந்திய ரயில்வே-யின் மின் கட்டணத்தை திடீரென உயர்த்தி ஒரு உத்தரவைப் பிறப்பித்தது. இதை அறிந்த ரயில்வே அமைச்சகம் கடும் அதிர்ச்சியை அடைந்தது.
என்ன காரணத்தால் இப்படி கடுமையாக கட்டணத்தை உயர்த்தி ரசீது அனுப்பப்பட்டது என்பது தெரியாமல் ரயில்வே அதிகாரிகளும் பதறிப் போய்விட்டனர். என்ன நடந்தது என்பதை இனி விரிவாகப் பார்க்கலாம்.
நாட்டின் மிகப் பெரிய மின்சார நுகர்வோர் இந்திய ரயில்வே தான். அதன் ரயில்கள், அலுவலகங்களை இயக்குவதற்காக ஆண்டுக்கு சுமார் ரூ.20,000 கோடி அளவுக்கு மின்சாரம் இந்திய ரயில்வேக்குத் தேவைப்படுகிறது.
இதனிடையே பல மாநில மின்சார விநியோக நிறுவனங்களுடன் உள்ள முரண்பாடு மோதல்களால் வழக்கு நடைபெற்று அதில் இந்திய ரயில்வே தோல்வியடைந்தது. இதனால் அதிக மின்கட்டணம் செலுத்த வேண்டிய நிலைக்கு இந்திய ரயில்வே தள்ளப்பட்டுள்ளது.
மின்சாரம் தயாரிக்கும் எந்த நிறுவனம் வேண்டுமானாலும் இந்த ஏலத்தில் பங்கெடுத்து மின்சாரத்தை ரயில்வேக்கு விற்கலாம். இதில் மிகவும் குறைந்த விலையோ அதை தேர்ந்தெடுத்து மின்சாரத்தை ரயில்வே வாங்கிக் கொள்ளும்.
இரண்டாவது வழியாக, உபரி மின்சாரத்தை இந்தியன் எனர்ஜி எக்ஸ்சேஞ்சிடம் வர்த்தகம் செய்வதன் மூலம் மின்சாரத்தை இந்திய ரயில்வே பெறுகிறது.
ஏனென்றால் பகல் நேரத்தில் அதிக ரயில்கள் இயங்காது. இதனால் பெரிய அளவு மின்தேவை இருக்காது. அத்துடன் பெரும்பாலும் மின்வயர், உபகரணங்கள் பராமரிப்பு வேலை தான் பெரும்பாலும் நடக்கும் என்பதால் உபரியை தந்து விடும். ஆனால் இரவு நேரத்தில் நிறைய ரயில்கள் இயக்குவதால் அதிக மின்சாரம் தேவை.
இதில் மின்சார விநியோக கார்ப்பொரேஷன்கள் ஒரு தரகர் போன்றிருப்பதால் மின்கட்டணச் செலவு அதிகமாகுவதை ரயில்வே நிர்வாகம் உணர்ந்தது. மாநில மின்வாரியங்களிடம் இருந்து வாங்குவதைக் காட்டிலும் 20 சதவீதம் அல்லது அதற்கும் கூடுதலாகச் செலுத்த வேண்டியிருந்தது.
இதைத் தொடர்ந்து மின்சார உற்பத்தி நிறுவனங்களிடம் இருந்து நேரடியாக மின்சாரத்தை கொள்முதல் செய்தால் ஆண்டுக்கு ரூ.3000 கோடியை மிச்சப்படுத்தலாம் என்பதை இந்திய ரயில்வே கண்டறிந்ததால் அது புதிய மாற்று வழி பற்றி யோசிக்கத் தொடங்கியது.
இதைத் தொடர்ந்து ரயில்வே நிர்வாகம், மத்திய மின்சார ஒழுங்குமுறை ஆணையத்துக்கு ஒரு விண்ணப்பத்தை அளித்தது. தங்கள் விருப்பப்படி மின்சாரத்தை வாங்குவதற்கு அதன் மூலம் அனுமதி கேட்டது. இதற்கு ஆணையமும் பச்சைக் கொடி காட்டியது. அத்துடன் இந்திய ரயில்வேக்கு டீம்டு டிஸ்ட்ரிபியூஷன் சர்டிபிகேட்டையும் ஆணையம் வழங்கியது.
இந்த சர்டிபிகேட் மூலமாக ரயில்வே தனியாக ஒரு லைசென்ஸ் பெறத் தேவையில்லை. அத்துடன் தனது உப மின் நிலையங்களுக்குத் தேவையான மின்சாரத்தை வழங்கவும், பராமரிப்பு வேலைகளைச் செய்யவும், ரயில் நிலையங்கள், பிற மாநிலங்களைச் சேர்ந்த மின் உற்பத்தியாளர்களிடம் இருந்து மின்சாரத்தை இந்திய ரயில்வே வாங்குவதற்கு அனுமதி கிடைத்தது. கிட்டத்தட்ட இந்திய ரயில்வேயும் ஒரு மின்விநியோக கார்ப்பொரேஷன் போல ஆனது.
இப்படி யோசித்துப் பாருங்கள். நீங்கள் ரயில் நிலையத்தில் இருந்து மின்சாரம் பெறும் ரயில் நிலைய உணவு விற்பனையாளர் என்று வைத்துக் கொள்வோம். உங்களிடமிருந்து பெற வேண்டிய மின்சார வருவாயை மாநில டிஸ்காம் இழக்கிறது. இப்போது இந்தியா முழுவதும் இந்த நிலைமையை கற்பனை செய்து பாருங்கள். இந்த டிஸ்காம்களுக்கு ஏற்படும் இழப்புகள் மிக அதிகமாக இருக்கும்.
எனவே மேற்கு வங்கம், பஞ்சாப் போன்ற மாநிலங்கள், ரயில்வேக்கு அளிக்கப்பட்ட இந்த சலுகையினால் மாநிலங்கள் பெரும் வருவாயை இழக்க நேரிடுகிறது என்று கூறி APTEL-லிடம்(மின்சாரம், எண்ணெய் மற்றும் எரிவாயு துறையின் முறையீடுகளைக் கேட்கும் அதிகார அமைப்பு) முறையிட்டன.
இதற்காக இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தன.
இப்போது முடிவு APTEL இன் வசம் உள்ளது. அது வழக்கை இரண்டு பகுதிகளாகப் பிரித்தது. ரயில்வேயில் உண்மையில் மின்சார விநியோக அமைப்பு உள்ளதா மற்றும் நுகர்வோருக்கு மின்சாரம் வழங்கப்பட்டுள்ளதா என்பதை அது முதலில் சரிபார்க்க வேண்டும்.
எனவே, CERC 2015 இல் வழங்கிய விநியோக உரிமதாரர் அந்தஸ்தை ரத்து செய்தது. அப்படியென்றால் ரயில்வே கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டி வருமா என்ற கேள்வி எழுகிறது.
காரணம், ரயில்வே தனது சொந்தச் செயல்பாடுகளுக்குத் தான் பெற்ற அனைத்து மின்சாரத்தையும் பயன்படுத்தியது. எதையும் சேமிக்கவில்லை. அதிகப்படியான மின்சாரத்தை மற்ற நுகர்வோருக்கு விற்கவில்லை.
இதன் காரணமாக ரயில்வேயின் மின் கட்டணம் ஆண்டுக்கு சுமார் ₹2,500 கோடி உயரும் நிலை ஏற்பட்டுள்ளது. நிச்சயம் இந்த கட்டணம் பயணிகள் தலையில் தான் விடியப்போகிறது.