24 மணி நேரம் கெடு.. நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும்.. ஏ.வி.ராஜூவுக்கு ஆப்பு வைத்த த்ரிஷா!

சென்னை: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான த்ரிஷா குறித்து சேலம் மாவட்டத்தின் அதிமுக முன்னாள் நிர்வாகி ஏவி ராஜு அவதூறாக பேசியிருந்த வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் வைரலானது. அவரது பேச்சுக்கு திரைத்துறையினரும் பலரும் கண்டனம் தெரிவித்து வந்த நிலையில், ஏவி ராஜு க்கு நடிகை திரிஷா வக்கீல் நோட்டிஸ் அனுப்பி உள்ளார்.

அதிமுக முன்னாள் நிர்வாகி ஏவி ராஜு, அண்மையில் அளித்த பேட்டியில் நடிகை த்ரிஷா குறித்தும் மற்ற் நடிகைகள் குறித்தும் மோசமாக பேசி இருந்தார். இது சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, இயக்குநர் சேரன்,குஷ்பு, கஸ்தூரி என திரைப்பிரபலங்கள் பலர் தங்களது கண்டனங்களை தெரிவித்தனர்.

சட்டப்படி நடிகை: இதுகுறித்து நடிகை த்ரிஷா தனது எக்ஸ் தள பக்கத்தில், “கவனத்தை ஈர்ப்பதற்காக எந்த நிலைக்கும் கீழே இறங்கும் கீழ்த்தரமான மற்றும் கேவலமான மனிதர்களை மீண்டும் மீண்டும் பார்ப்பது அருவருப்பாக உள்ளது. தேவையான மற்றும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளிக்கிறேன். இனிமேல் சொல்ல வேண்டிய ஒன்றும் இல்லை அனைத்தையும் சட்டப்படி செய்வேன் என பதிவிட்டு இருந்தார்.

மன உளைச்சலில் இருந்தேன்: இந்த விவகாரம் ஒரு பக்கம் புயலை கிளப்பிக் கொண்டு இருக்கும் நிலையில், ஏ.வி.ராஜுக்கு த்ரிஷா வக்கீல் நோட்டீஸ் அனுப்பி உள்ளார். அந்த நோட்டீசை திரிஷா தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், ஏ.வி.ராஜுவின் பேச்சால், கடந்த நான்கு நாட்களாக மன உளைச்சலுக்கு ஆளானேன் என்றும். இதற்கு குறிப்பிட்ட தொகையை அவருக்கு கொடுக்க வேண்டும் என அந்த வக்கீல் நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், ஊடகங்கள், மின்னணு ஊடகங்கள், செய்தி ஊடகம், யூடியூப் தளங்கள் உட்பட அனைத்திலும் த்ரிஷாவிற்கு எதிராக எந்த அவதூறான செய்தியை வெளியிடுவதை வெளியிடுவதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

24 மணிநேரம் கெடு: மேலும், பத்திரிக்கை, சமூக வலைத்தளங்களில், த்ரிஷா குறித்து அவர் பேசியுள்ள, வெளியிட்டுள்ள அவதூறான அறிக்கைகள் மற்றும் குற்றச்சாட்டுகள் ஆகியவற்றின் அனைத்து பதிவுகளையும் உடனடியாக நீக்க அல்லது அகற்ற தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும். இந்த அறிவிப்பை பெற்ற 24 மணி நேரத்திற்குள் திரிஷாவிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கோருவதுடன், மன்னிப்பு அறிக்கை வெளியிட வேண்டும் எனவும் ஏ.வி.ராஜூவிற்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. தமிழ் ஆங்கில செய்தித்தாள்களில் மன்னிப்புக் கேட்டு விளம்பரம் வெளியிட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும், தொலைக்காட்சிகள், யூடியூப் சேனல்களிலும் மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிட வேண்டும் என்று நடிகை திரிஷா வலியுறுத்தியுள்ளார்.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *