சன் டி.வி-யில் இந்த சீரியல் இன்னும் முடியலையா? பிப்ரவரி வரை நீட்டிப்பு
நாயகி இறந்துவிட்டாலும், இன்றும் ஒளிபரப்பாகி வரும் அன்பே வா சீரியல், வரும் பிப்ரவரி மாதம் வரை நீடிக்கப்பட்டுள்ளதா? அல்லது பிப்வரியில் முடிக்கு வர உள்ளதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
திரைப்படங்களை விட சின்னத்திரை சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இதன் காரணமாக திரைக்கதை நன்றாக இருக்கும் சீரியல்களின் டிஆர்பி ரேட்டிங்கும் அதிகரித்து வருகிறது. இதில் சன்டிவி சீரியல்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், பல சீரியல்கள் கவனம் ஈர்த்து வருகிறது.
அந்த வகையில் சன் டிவியின் அன்பே வா சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. விராட் டெல்னா டேவிஸ் நாயகன் நாயகியாக நடித்து வரும் இந்த சீரியலில் பூஜா, ஸ்வாதி, தாரா உள்ளிட்ட பலர் முக்கிய கேரக்டரில் நடித்து வருகின்றனர். இந்த சீரியலில் வில்லியாக நடித்து வரும் மகாலட்சுமி தயாரிப்பாளர் ரவீந்தரை திருமணம் செய்துகொண்டார்.
அன்பே வா சீரியலில் மகாலட்சுமியின் வில்லத்தனம் வரவேற்பை பெற்று வரும் நிலையில், இவருக்காகவே இந்த சீரியலின் டிஆர்பி ரேட்டிங் அதிகரித்து வருகிறது. அதோடு மட்டுமல்லாமல் நாயகி பூமிகாவுக்கும் ரசிகர்கள் ஆதரவு அளித்து வருகின்றனர். இவ்வளவு பாசிட்டீவ் இருந்தாலும் சமீபத்தில் இந்த சீரியலில் நாயகி பூமிகா இறப்பது போல் காட்சிகள் வந்தது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளர்.
நாயகி இறந்துவிட்டால் அடுத்த சில எபிசோடுகளில் சீரியல் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு அதிரடி திருப்பம் தரும் வகையில், தொடர்ந்து சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. கடந்த 2020-ம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலில் தற்போது ஸ்ரீகோபிகா நாயகியாக நடித்து வருகிறார்.
நாயகி இறந்த பின் சீரியல் முடியும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது ஜவ்வு மாதிரி கதையை இழுத்துக்கொண்டு செல்வதால், எப்போது முடிவுக்கு வரும் என்று ரசிகர்கள் கேட்க தொடங்கிவிட்டனர். இதனிடையே அன்பே வா சீரியல், பிப்ரவரி மாதத்துடன் நிறைவடையும் என்று கூறப்பட்டுள்ளது. இதை பார்த்த ரசிகர்கள் நிறைவடையும் என்று சொல்வதற்கு பதிலாக நீடிக்கப்பட்டுள்ளது என்று சொல்வது தான் சரியாக இருக்கும் என்று கூறி வருகின்றனர்.