புதிய ஸ்டைலில் பஜாஜ் பல்சர் N250 அறிமுக விபரம்
பஜாஜ் ஆட்டோவின் பல்சர் வரிசையில் தற்பொழுது டாப் மாடலாக உள்ள பல்சர் N250 2024 ஆம் ஆண்டிற்கான மாடல் அடுத்த மாதம் விற்பனைக்கு வெளியிடப்பட வாய்ப்புகள் உள்ளது. வரவுள்ள புதிய என்250ல் புதுப்பிக்கப்பட்ட நிறங்கள், மேம்பட்ட சஸ்பென்ஷன் மற்றும் டிஜிட்டல் கிளஸ்ட்டர் பெற உள்ளது.
சமீபத்தில் வெளியான பல்சர் என்150 முதல் என்எஸ்200 பைக் வரை இடம்பெற்றிருக்கின்ற டிஜிட்டல் கிளஸ்ட்டரின் மூலம் ரைட் கனெக்ட் செயிலி வாயிலாக ஸ்மார்ட்போனை இணைத்தால் அழைப்புகளை ஏற்க அல்லது நிரகரிக்கும் வசதி, எஸ்எம்எஸ் அலர்ட் உட்பட டர்ன் பை டர்ன் நேவிகேஷன் என பல்வேறு வசதிகளை பெற முடியும்.
இந்த பைக் மாடலில் 249cc, SOHC, ஆயில்-கூல்டு இன்ஜின் பொருத்தப்பட்டு 24.5hp மற்றும் 21.5Nm டார்க்கை உருவாக்குகிறது. இதில் 5 வேக கியர்பாக்ஸ் உடன் ஸ்லிப் மற்றும் அசிஸ்ட் கிளட்ச் உள்ளது.
முன்பக்கத்தில் உள்ள சஸ்பென்ஷனில் டெலஸ்கோபிக் ஃபோர்கிற்கு மாற்றாக அப்சைடு டவுன் ஃபோர்க் ஆனது பொருத்தப்பட்டலாம் என எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில் பின்புறத்தில் மோனோ ஷாக் சஸ்பென்ஷனை பெற உள்ளது. பஜாஜ் பல்சர் என்250 பைக்கில் 300மிமீ டிஸ்க் மற்றும் 230மிமீ டிஸ்க் மற்றும் டூயல் சேனல் ஏபிஎஸ் உடன் பொருத்தப்பட்டுள்ளது.
புதுப்பிக்கப்பட்ட எல்இடி ஹெட்லைட் பெறுவதற்கான வாய்ப்புகளுடன் கூடுதலாக பாடி கிராபிக்ஸ் மேம்படுத்தப்பட்டிருக்கலாம். தற்பொழுது விற்பனையில் உள்ள மாடலை விட ரூ.6000 முதல் 8,000 வரை விலை உயர்த்தப்படலாம்.