ரூ.24,000 வரை பவுன்ஸ் இன்ஃபினிட்டி E1+ ஸ்கூட்டர் விலை குறைப்பு
பேட்டரி ஸ்வாப்பிங் நுட்பத்தை பெற்ற பவுன்ஸ் நிறுவனத்தின் இன்ஃபினிட்டி E1+ எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை ரூ.24,000 வரை குறைக்கப்பட்டு புதிய விலை ரூ.89,999 ஆக அறிவிக்கப்பட்டுள்ளது.
பவுன்ஸ் எலக்ட்ரிக் நிறுவனம் விற்பனை செய்கின்ற இன்ஃபினிட்டி E1 மாடல் 2.2 Kw பவரை வெளிப்படுத்துகின்ற ஸ்கூட்டரில் உள்ள 2kwh பேட்டரி கொண்டு சிங்கிள் சார்ஜில் 85 கிமீ ரேஞ்ச் தரவல்லதாகும். இந்த மாடலுக்கான பேட்டரி ஸ்வாப்பிங் செய்யும் நுட்பத்தை கொண்டிருக்கும். அதிகபட்சமாக 65Km/hr வேகத்தை வழங்குகின்றது.
உண்மையான பயணிக்கும் வரம்பு ஈக்கோ மோடில் 65-70 கிமீ மற்றும் ஸ்போர்ட் மோடில் 55-60 கிமீ வெளிப்படுத்தலாம்.
பவுன்ஸ் E1+ எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் முன்பக்கத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க்கு, பின்புறத்தில் ட்வின் ஸ்பிரிங் ஷாக் அப்சார்பரை பெற்று பிரேக்கிங் அமைப்பில் ஒருங்கிணைந்த பிரேக்கிங் சிஸ்டத்துடன் இரு முனைகளிலும் டிஸ்க் பிரேக்குகளைப் பெறுகிறது. இந்த விலை குறைப்பு சலுகை மார்ச் 31, 2024 வரை மட்டுமே செல்லுபடியாகும்.