IPL 2024 – முதல் போட்டியில் சிஎஸ்கே, ஆர்சிபி மோதல்.. சென்னை அணி விளையாடும் போட்டிகள் முழு விவரம்

ஐபிஎல் 2024 ஆம் ஆண்டு சீசன் வரும் மார்ச் 22ஆம் தேதி வெள்ளிக்கிழமை தொடங்கும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுவதால் தற்போது முதல் 21 போட்டிகளுக்கான அட்டவணை மட்டும் தான் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

நாடாளுமன்ற தேர்தல் அட்டவணை வெளியான பிறகு அதற்கு தகுந்தார் போல் எஞ்சிய போட்டிகளுக்கான ஐபிஎல் அட்டவணை வெளியிடப்படும் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வகையில் நடப்பு சீசனில் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பெங்களுருவை எதிர்கொள்கிறது.

இந்த போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்குகிறது. மார்ச் 23ஆம் தேதி 2 போட்டிகள் நடைபெறுகிறது. அதில் பஞ்சாப் டெல்லி அணி மதியம் மொகாலியிலும், இரவு கேகேஆர், ஹைதராபாத் அணி இரவு கொல்கத்தாவிலும் மோதுகிறது. மும்பை அணி தங்களுடைய முதல் போட்டியை வரும் 24ஆம் தேதி எதிர்கொள்கிறது.

இதில் குஜராத் அணியுடன் அந்த அணி எதிர்கொள்கிறது. சிஎஸ்கே அணி தன்னுடைய இரண்டாவது போட்டியை மார்ச் 26 ஆம் தேதி விளையாட இருக்கிறது. கடந்த முறை இறுதிப் போட்டியில் மோதிய குஜராத்துடன் சிஎஸ்கே சேப்பாக்கம் மைதானத்தில் சந்திக்கிறது. சிஎஸ்கே அணி தங்களுடைய மூன்றாவது போட்டியை மார்ச் 31ஆம் தேதி விளையாடுகிறது.

விசாகப்பட்டினத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டெல்லி அணியை சென்னை எதிர் கொள்கிறது. சிஎஸ்கே தங்களுடைய நான்காவது போட்டியை ஏப்ரல் ஐந்தாம் தேதி விளையாடுகிறது. இதில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை அவர்களது சொந்த மண்ணில் எதிர்கொள்கிறது.

தற்போது அறிவிக்கப்பட்டுள்ள 21 போட்டிகளில் சிஎஸ்கே அணி தங்களுடைய முதல் 4 போட்டிகளில் விளையாடுகிறது. இதில் இரண்டு போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது. ஐபிஎல் வரலாற்றில் ஒன்பதாவது முறையாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதல் லீக் ஆட்டத்தில் விளையாடுகிறது.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *