IND vs ENG : ராஞ்சி மைதானத்தின் பிட்ச் ரிப்போர்ட்.. டாஸ் வென்றால் என்ன செய்ய வேண்டும்? முழு விவரம்!

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4வது டெஸ்ட் போட்டி நடக்கும் ராஞ்சி மைதானத்தின் பிட்ச் ரிப்போர்ட் குறித்து பார்க்கலாம்.

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4வது டெஸ்ட் போட்டி ராஞ்சி மைதானத்தில் நடக்கவுள்ளது. ஏற்கனவே இந்திய அணி 2 டெஸ்ட் போட்டிகளில் வென்றுள்ள நிலையில், ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்து தொடரை கைப்பற்றி தயாராகி வருகிறது. மறுபக்கம் இங்கிலாந்து அணி பேஸ் பால் பற்றிய விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்க தீவிரமாக உள்ளது.

இதனால் 4வது டெஸ்ட் போட்டி ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஞ்சி மைதானம் என்பதால் இந்த பிட்ச் எப்படி இருக்கும் என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது. ஏனென்றால் ராஞ்சி மைதானத்தில் இதுவரை 2 டெஸ்ட் போட்டிகள் மட்டுமே நடத்தப்பட்டுள்ளன. அதில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான போட்டியில் டிராவில் முடிந்ததோடு, தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் இந்தியா வென்றது.

அதுமட்டுமல்லாமல் ராஞ்சி மைதானத்தின் பிட்சில் ஒரு பக்கம் ஆஃப் ஸ்டம்ப் இருக்கும் பகுதியில் கொஞ்சம் கடினமாகவும், மறுபக்கம் லெக் ஸ்டம்ப் இருக்கும் பகுதி கடினமாக இருப்பது தெரிய வந்துள்ளது. இதனால் ராஞ்சி பிட்ச் 3 மற்றும் 4 ஆகிய நாட்களில் ஸ்பின்னர்களுக்கு சாதகமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்திய அணி வழக்கம் போல் 3 ஸ்பின்னர்களுடன் களமிறங்கும் என்று பார்க்கப்படுகிறது.

அதேபோல் ராஞ்சி மைதானத்தில் டாஸ் வெல்லும் அணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் என்று பார்க்கப்படுகிறது. முதல் நாளில் ராஞ்சி பிட்ச் பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. அதன்பின் கொஞ்சம் கொஞ்சமாக பவுலர்களுக்கு சாதகமாக மாறும் என்பதால், டாஸ் வெல்லும் அணி முதல் பேட்டிங்கை செய்யவே விரும்பும்.

அதேபோல் வேகப்பந்துவீச்சாளர்களுக்கு ராஞ்சி பிட்சில் பவுன்ஸ் கிடைக்காது என்பதால், பவுலர்கள் அடிப்படையான ஸ்டம்ப் லைனில் வீசினால் மட்டுமே விக்கெட் வீழ்த்த முடியும் என்று கூறப்படுகிறது. இதனால் பிட்சில் உள்ள கிராக்கை பயன்படுத்தி பவுலர்கள் விக்கெட்டை வீழ்த்த முயற்சிக்க வேண்டும் என்று தெரிய வந்துள்ளது.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *