அமெரிக்காவில் அதிக குளிரால் உயிரிழந்த இந்திய மாணவர்
அமெரிக்காவில் குளிரான சூழலில் அதிக நேரம் இருந்தமையினால் ஹைப்போதெர்மியா என்ற பாதிப்பால் இந்திய மாணவரொருவர் உயிரிழந்துள்ளதாக என அந்நாட்டு பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.
அமெரிக்காவில் இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்தில் படித்து வந்த அகுல் தவான் என்ற இந்திய மாணவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த மாணவர் கடந்த ஜனவரி 20ஆம் திகதி மரணம் அடைந்த நிலையில், அதற்கான காரணம் ஒரு மாதம் கழித்து வெளிவந்து உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பொலிஸ் விசாரணை
மேலும், மதுபானம் குடித்ததில் ஏற்பட்ட விளைவு மற்றும் அதிக குளிரான சூழலில் அதிக நேரம் இருந்தமையும் மரணத்திற்கான காரணங்களென பொலிஸார் கூறியுள்ளனர்.
இது தொடர்பில் உயிரிழந்த மாணவரின் குடும்பத்தினர் கூறும்போது, காணாமல் போன உடன் தகவல் தெரிவித்த உடனேயே கண்டுபிடிக்காமல் 10 மணிநேரத்திற்கு பின்னரே அகுலை கண்டுபிடித்து உள்ளனர்.
காணாமல் போன இடத்திற்கும். கிடைத்த இடத்திற்கும் இடையே 200 அடி தொலைவே உள்ளது. நன்றாக படித்து வந்த மாணவனாக இருந்த அகுலால் நாங்கள் பெருமையடைந்து இருந்தோம். பொலிஸார் அவனை தேடி கண்டுபிடிக்கவே இல்லை என குற்றம் சாட்டியுள்ளனர்.