நீரிழிவு நோயாளிகள் எந்த பழங்களை சாப்பிடலாம்னு தெரியுமா?
பொதுவாகவே நீரிழிவு நோயாளிகள் உணவு தொடர்பில் கூடிய கவனம் செலுத்த வேண்டியது அவசியம். இல்லாவிடில் பாரிய அபாயகரமான விளைவுகளை சந்திக்க நேரிடும்.
மேலும், பழச்சாறு உள்ளிட்ட அதிகமாக சர்க்கரை அடங்கிய நீர்ம உணவுகளை எடுத்துக்கொள்ளக் கூடாது.
இந்நிலையில், நீரிழிவு நோயாளிகள் சாப்பிடக்கூடிய பழங்கள் தொடர்பிலும் தவிர்க்க வேண்டிய பழங்கள் குறித்தும் நம்மில் பலரிடம் போதிய விழிப்புணர்வு இருப்பதில்லை.இது தொடர்பான சரியான விளக்கத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.
எந்த பழங்களை சாப்பிடலாம்?
ஆப்பிள் – அனைவராலும் விரும்பப்படும் ஒரு பழமாக ஆப்பிள் காணப்படுகின்றது. இது இனிப்பாக பழமாக இருந்த போதிலும் சர்க்கரை நோயாளிகள் அதனை தாராளமாக சாப்பிடலாம்.
இதில் கிளைசெமிக் இண்டெக்ஸ் அதிகமாக இருப்பதால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவுவை கட்டுப்படுத்த துணைப்புரிகின்றது.
தர்பூசணி- நீரிழிவு நோயாளிகளுக்கு தர்பூசணி பழம் சிறந்தாகவும் அதில் காணப்படும் இனிப்புத்தன்மை சர்க்கரையின் அளவு அதிகரிக்காது என மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர். காரணம் தர்பூசணியின் கிளைசெமிக் குறியீட்டு அளவும் மிகவும் குறைவாக காணப்படுவதால் சர்க்கரை நோய் இருந்தாலும் தினமும் தர்பூசணி சாப்பிடுவது பாதிப்பை ஏற்படுத்தாது.
திராட்சை-சர்க்கரை நோயாளிகள் தினமும் திராட்சையை சாப்பிடலாம் என பரிந்துரைக்கப்படுகின்றது. இதில் இருக்கும் லேசான இனிப்பு நமது இனிப்பு பசியை போக்குவது மட்டுமல்லாது சர்க்கரை அளவை அதிகரிக்கவிடாமல் தடுக்கும்.