அச்சு அசல் சமந்தா போலவே திருமணக் கோலத்தில் இருக்கும் பெண்; வைரலாகும் புகைப்படம்
அச்சு அசல் சமந்தா போலவே இருக்கும் ஒரு பெண்ணின் புகைப்படமானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
நடிகை சமந்தா
இந்திய திரைப்பட நடிகைகளில் மிகவும் பிரபலமான நடிகையான சமந்தா இருக்கிறார். இவர் தனது தனித்துவமான நடிப்பினாலும் மற்றும் திறமையினாலும் ரசிகர்களை கவர்ந்து இழுத்துக்கொண்டவர்.
கௌதம் மேனன் இயக்கத்தில் இவர் நடித்த ஏ மாய சேசாவே திரைப்படம் மூலம் தெலுங்கு திரையுலகிலும் வெள்ளித்திரைக்கும் அறிமுகமானார்.
இவர் தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு திரையுலகிலும் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே வைத்துள்ளார்.
இந்நிலையில் நடிகை சமந்தாவை போல அச்சு அசலாக இருக்கும் ஒரு பெண்ணின் புகைப்படம் இணையில் வைரலாகி வருகிறது.
வைரலாகும் அந்த பெண்
உலகில் ஒருவரை போல் 7 பேர் இருப்பார்கள் என சொல்லி கேள்விப்பட்டு இருப்போம்.
இந்நிலையில் நடிகை சமந்தாவை போலவே இருக்கும் பெண் ஒருவர், சமந்தா தனது திருமணத்தில் எப்படி இருந்தாரோ, அதே போன்ற புடவை, மேக்கப் மற்றும் நகைகளை அணிந்து புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அது தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.