தினமும் கண்களுக்கு மேக்-அப் போடுறீங்களா? அப்போ இந்த ஆபத்து நிச்சயம்

பொதுவாகவே பெண்கள் தங்களின் கண்களை அழகுப்படுத்திக்கொள்வதில் அதிக அக்கறை காட்டுகின்றனர்.அதனால் கண்களுக்கு மேக் அப் பொருட்களை அதிகம் பயன்படுத்துகின்றார்கள்.

தற்போது கண்களை அழகுபடுத்த காஜல், மஸ்காரா, கண்மை, ஐ லைனர் போன்ற பல்வேறு அழகு சாதனப்பொருள்கள் கடைகளில் கிடைக்கின்றது.

இவற்றில் அதிகளவாக ரசாயன பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவ்வாறான மேக் அப் பொருட்களை தினசரி பயன்படுத்தலாமா? இதனால் ஏற்படும் பக்க விளைவுகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

கண்களுக்கு ஏற்படும் பாதிப்புக்கள்
கண்களுக்கு அழகு சேர்ப்பதில் காஜல் முக்கிய இடம் வகிக்கின்றது. காஜலில் கண்களுக்கு தீங்கு விளைவிக்கும் சில கார்பன் துகள்கள் காணப்படுகின்றன.

இதன் காரணமாக, கான்ஜுன்க்டிவிடிஸ் (கண் காய்ச்சல்) மற்றும் கார்னியல் அல்சர் (கண் கண்மணியில் புண்) ஏற்பட வாய்ப்பு உள்ளது.

முறையான சிகிச்சை பெற்றுக்கொள்ளாவிட்டால் கண்ணில் வீக்கம் மற்றும் கார்னியல் அல்சர் காரணமாக பார்வை இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.

ரசாயனம் கலந்த காஜலை தினசரி பயன்படுத்துவது ஆபத்துக்குரியது. எனவே, கண்களில் காஜலைப் பயன்படுத்தும் போது மிகவும் அவதானமாக பாவிக்க வேண்டும். மேலும் காஜல் தினசரி பயன்படுத்துவது கண்களின் ஆரோக்கியத்தை பெரிதும் பாதிக்கும்.

மஸ்காரா ஒரு தூரிகையின் உதவியுடன் கண் இமைகளின் வேர்களில் இருந்து விளிம்பை நோக்கி பயன்படுத்தப்படுகிறது. இதனால் கண் இமைகள் அடர்த்தியாக இருக்கும்.

மஸ்காராவில் பயன்படுத்தப்படும் சில வகையான இரசாயனங்கள் கண்களில் ஒவ்வாமையை ஏற்படுத்துகின்றன. எனவே, மஸ்காரா போடும் போது, கண்களுக்குள் மஸ்காரா வராமல் பார்த்துக் கொள்வேண்டும்.

தற்செயலாக கண்களில் மஸ்காரா விழுந்தாலும், அத்தகைய சூழ்நிலையில் கண்களை சுத்தமான தண்ணீரில் கழுவ வேண்டும்.

மஸ்காராவைப் பயன்படுத்துவதால் கண் இமைகளில் அரிப்பு அல்லது வேறு ஏதேனும் பிரச்சனை இருந்தால், உடனடியாக மஸ்காராவைப் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டியது அவசியம்.

ஐ-லைனர் காரணமாக வெண்படல அழற்சி அல்லது கார்னியல் காயம் ஏற்பட வாய்ப்பு அதிகரிக்கின்றது. இதனை தினசரி பயன்படுத்ததை தவிர்த்துக்கொள்ள வேண்டும்.

மேலும் புருவங்கள் மற்றும் கண் இமைகளுக்கு இடையில் உள்ள தோலில் ஐ ஷேடோக்கள் பயன்படுத்தப்படுகிறது.

ஐ ஷேடோக்களிலும் பல்வேறு வகையான இரசாயனங்கள் காணப்படுகின்றன. அவற்றின் பயன்பாடு காரணமாக, மேல் கண்ணிமை மீது ஒவ்வாமை மற்றும் தோல் பிரச்சினைக்கு வழிவகுக்கும். பொதுவாகவே இவ்வாறான மேக்-அப் பொருட்களை தினமும் பாவிப்பதை தவிர்ப்பதே சிறந்தது.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *