112 டூ 315.. அசைக்க முடியாத சாதனைகளை செய்த மக்கள் இமயம்.. விஜயகாந்தின் சூப்பர்டூப்பர் ஹிட் படங்கள் இத்தனையா?
தமிழ் சினிமாவின் கருப்பு தங்கம் என புகழப்பட்ட விஜயகாந்த். அவருக்கு ஏற்கனவே சில வருடங்களாக உடல்நிலை சரியில்லாமல் தான் இருந்தார். இன்று திடீரென உயிரிழந்தார். தமிழகமே ஸ்தம்பித்து இருக்கும் நிலையில், விஜயகாந்தின் சில சாதனைகள் குறித்த ஆச்சரிய தகவலும் இணையத்தில் தொடர்ச்சியாக வெளிவந்து கொண்டு இருக்கிறது. இனிக்கும் இளமை என்ற படத்தில் வில்லனாக அறிமுகமானவர் விஜயகாந்த்.
ஆனால் அவருக்கு பெரிய ரீச் கிடைக்கவில்லை. தொடர்ச்சியாக வாய்ப்பு வந்தும் கூட அவருக்கு நிறைய தோல்வி படங்களே அமைந்தது. முதல்முறையாக எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் வெளியான சட்டம் ஒரு இருட்டறை படத்தில் நடித்தார். அந்த படம் தான் அவரின் கேரியரையே மாற்றியது. தொடர்ந்து கமர்ஷியல் நாயகனாக நிறைய ஹிட் கொடுத்து கொண்டே இருந்தார். அத்தனை படமும் வசூல் சாதனை படைத்தது.
இதில் சில படங்கள் 100 நாட்கள் இல்லை கிட்டத்தட்ட 300 நாட்களுக்கு மேல் ஓடியதாம். அப்படி ஒரு லிஸ்ட் தற்போது இணையத்தில் லீக்காகி இருக்கிறது. அதில், 1984ம் ஆண்டு வைதேகி காத்திருந்தாள் படம் ரிலீஸாகி 175 நாட்கள் ஓடி சாதனையை படைத்தது. அது இவரின் கேரியரில் முதல் மிகப்பெரிய வெற்றி என்பது குறிப்பிடத்தக்கது. அம்மன் கோவில் கிழக்காலே, ஊமை விழிகள் திரைப்படம் 1986ம் ஆண்டு ரிலீஸாகி 175 மற்றும் 200 நாட்கள் ஓடியது.
ஒரே வருடத்தில் இரண்டு படங்களுமே ப்ளாக்பஸ்டர் ஹிட்டாக கொடுத்தது விஜயகாந்தாக தான் இருக்கும். 1988ம் ஆண்டு பூந்தோட்ட காவல்காரன், செந்தூரப்பூவே இரண்டு படங்களுமே ரிலீஸாகி மீண்டும் 180 மற்றும் 186 நாட்கள் ஓடி சாதனை புரிந்தது. 1989ம் வருடம் பாட்டுக்கு ஒரு தலைவன் 175 நாட்கள் ஓடியது. 1990ம் ஆண்டு வெளியான புலன் விசாரணை 220 நாட்கள் ஓடியது.
1991ம் ஆண்டு மாநகர காவல் திரைப்படம் 230 நாட்கள் ஓடியது. அதே வருடம் வெளியான கேப்டன் பிரபாகரன் 300 நாட்கள் ஓடி சாதனை புரிந்தது. 1992ம் ஆண்டு ரிலீஸான சின்ன கவுண்டர் திரைப்படம் 315 நாட்கள் ஓடியது. இதுதான் இவர் கேரியரில் அதிக நாட்கள் ஓடிய திரைப்படம். 1994ம் ஆண்டு என் ஆசை மச்சான், சேதுபதி ஐபிஎஸ் திரைப்படம் 175 மற்றும் 150 நாட்கள் ஓடியது.
2000ம் ஆண்டு வல்லரசு மற்றும் வானத்தை போல திரைப்படம் வெளியாகி 112 மற்றும் 175 நாட்கள் ஓடியது. 2002ம் ஆண்டு ரிலீஸான ரமணா 150 நாட்கள் ஓடி சாதனை புரிந்தது. இதில் இன்னும் நிறைய படங்கள் இருக்கிறது. அவையெல்லாம் 100 நாட்கள் ஓடிய படம் என்பதும் குறிப்பிடத்தக்கது.