புதிய நிறத்துடன் மஹிந்திரா ஸ்கார்பியோ-N அறிமுகமானது
மஹிந்திரா நிறுவனத்தின் பிரசத்தி பெற்ற 2024 ஆண்டிற்கான ஸ்கார்பியோ-N எஸ்யூவி மாடலில் Z8 செலக்ட் என்ற வேரியண்ட் ரூ.16.99 லட்சம் முதல் ரூ.18.99 லட்சம் விலையில் அறிமுகம் செய்யப்பட்டிருப்பதுடன் கூடுதலாக மிட்நைட் பிளாக் என்ற நிறமும் சேர்க்கப்பட்டுள்ளது.
Z6 + வேரியண்டில் உள்ள வசதிகளுடன் கூடுதலாக Z8 Select வேரியண்டில் R17 டயமண்ட் கட் அலாய் வீல், காபி பிளாக் லெதேரெட் இன்டிரியர், எல்இடி ஹெட்லேம்ப், எல்இடி புரொஜெக்டர் ஃபோக்லாம்ப்ஸ் மற்றும் எல்இடி டிஆர்எல் ஆகியவற்றுடன் அலெக்ஸா பில்ட்-இன் உடன் 60 க்கு மேற்பட்ட அட்ரெனாக்ஸ் கனெக்ட்டிவிட்டி அம்சம், டிரைவ் மோடு ஜிப், ஜாப், ஜூம் ஆகியவற்றையும் இந்த வேரியண்ட் கொண்டுள்ளது. அடிப்படையான நான்கு டிஸ்க் பிரேக்குகள், ஏபிஎஸ், ஈஎஸ்பி, ஆறு ஏர்பேக்குகளை கொண்டுள்ளது.
7 இருக்கை பெற்ற மஹிந்திரா Scorpio-N Z8 Select வேரியண்டிலும் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் விருப்பங்களில் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் தேர்வுகளில் கிடைக்கின்றது. 2.0-லிட்டர் டர்போ பெட்ரோல் மோட்டார் 197 bhp மற்றும் 380 Nm டார்க்கை உற்பத்தி செய்கிறது. அடுத்து, 2.2 லிட்டர் டீசல் என்ஜின் 173 bhp மற்றும் 400 Nm டார்க்கை உருவாக்குகிறது. இரண்டு இன்ஜின்களும் 6-ஸ்பீடு மேனுவல் அல்லது டார்க் கன்வெர்ட்டருடன் கூடிய ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மூலம் இணைக்கப்பட்டுள்ளன.
புதிய ஸ்கார்ப்பியோ-N Z8 Select வேரியண்டுகள் மார்ச் 1 முதல் டீலர்ஷிப்களில் விற்பனைக்கு கிடைக்க உள்ளது.
சமீபத்தில் 1,00,000 உற்பத்தி இலக்கை கடந்த ஸ்கார்ப்பியோ-என் சாதனை படைத்துள்ளது. மேலும் இந்த மாடலும் ஸ்கார்ப்பியோ கிளாசிக் என இரண்டும் ஜனவரி 2024 முடிவில் சுமார் 1,00,000க்கு மேற்பட்ட புக்கிங் டெலிவரி வழங்கப்படாமல் உள்ளது.