அமைதிக்கான நோபல் பரிசை எலான் மஸ்க்கிற்கு வழங்க பரிந்துரை..!

டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களின் தலைவரும் தொழிலதிபருமான எலான் மஸ்க் சமூக வலைத்தளமான டுவிட்டரை 2022- இல் வாங்கி எக்ஸ் என பெயர்மாற்றம் செய்தார். சுதந்திர பேச்சை வெளிப்படுத்த இதனை செய்ததாக அவர் குறிப்பிட்டார். மேலும், ரஷியா- உக்ரைன் போரில் உக்ரைன் ராணுவத்துக்கு செயற்கைக்கோள்வழி தொடர்பினை அவரது நிறுவனம் ஏற்படுத்திக் கொடுத்தது.

இதற்காகவே எலான் மஸ்க் பெயரை 2024-ம் ஆண்டிற்கான நோபல் பரிசுக்குப் பரிந்துரைக்கலாம் என்று நார்வே நாடாளுமன்ற உறுப்பினர் மரியஸ் நில்சன் கூறியுள்ளார்.

நார்வேயில் முற்போக்குக் கட்சியைச் சேர்ந்த மரியஸ் நில்சன், வெளிப்படையான பேச்சு மற்றும் பல்வேறு தரப்பு வாதங்களை அனுமதிக்கும் ட்விட்டரை வாங்கி அதன் தணிக்கைக்கு முற்றுப் புள்ளி வைத்ததாகவும், சுதந்திர கருத்துரிமையை ஊக்குவிக்கும் செயலில் ஈடுபடுவதால் எலான் அமைதிக்கான நோபல் பரிசுக்குத் தகுதியானவர் என்றும் கூறியுள்ளார்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *