இதை தெரிஞ்சிக்கோங்க..! பணம் தங்க பீரோவில் வைக்க வேண்டிய பொருள்..!
ஒரு காலத்தில் உண்ண உணவு, உடுக்க உடை இருக்க இருப்பிடம் இது இருந்தால் போதும் என்ற நிலை இருந்தது. அது மாறி இப்போது இவையெல்லாம் நமக்கு கிடைக்கவே பணம் தேவை என்ற நிலை வந்து விட்டது. ஆகையால் தான் இன்றைக்கு மனிதனுக்கு பண தேவை பலமடங்கு பெருகி விட்டது. அந்த பணத்தை சம்பாதிக்கவும் சேர்க்கவும் அல்லும் பகலும் பாடுபட்டுக் கொண்டே இருக்கிறார்கள்.
அப்படி இருந்தாலும் ஒரு சிலர் பணத்தை சேமிக்கவும் முடியவில்லை தக்க வைத்துக் கொள்ளவும் முடிவதில்லை என்ன தான் நம்முடைய உழைப்பு முயற்சி இருந்தாலும் பணம் தங்குவதற்கு அதற்கான யோகம் நமக்கு வேண்டும். அப்படியான யோகத்தை தரக் கூடிய ஒரு எளிமையான பரிகாரத்தை தான் ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் இப்போது நாம் தெரிந்து கொள்ளபோகிறோம்.
பணம்தங்க பீரோவில் வைக்க வேண்டிய பொருள்:
பணத்தை பொருத்த வரையில் அதை வாங்கும் போது வைக்கும் பொழுதோ ஒருவரிடம் கொடுக்கும் போது நாம் நேரம்காலம் பார்ப்பதும் ராசி பார்ப்பதும் உண்டு. பணத்தை ஒரு சில இடத்தில் வைக்கும் போது அது பலமடங்கு பெருகும். இதற்குக் காரணம் அப்படியான இடங்களில் வைக்கும் போது பணவரவு அதிகரிக்கும் என்று சொல்லப்படுகிறது. அந்த வகையில் வீட்டில் பணம் வைக்கக் கூடிய முக்கியமான ஒரு இடமே அது பீரோ தான் அந்த பீரோவை நாம் சரியான முறையில் பயன்படுத்தினாலே போதும் பணவரவு தடையின்றி பெருகும் என்று சொல்லப்பட்டிருக்கிறது.
இந்தப் பதிவில் பீரோவில் நாம் ஒரு சில பொருட்களை சேர்த்து வைப்பதன் மூலம் பணவரவு அதிகரித்து பண ஈர்ப்பு ஏற்படும் என்று சொல்லப்படுகிறது. அது என்னவென்று இப்போது பார்க்கலாம். ஒருசிறிய கண்ணாடி டம்ளர் அல்லது கிண்ணம் இரண்டில் ஏதாவது ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் இரண்டு கிராம்பு, ரெண்டு ஏலக்காய், ரெண்டு அன்னாசிப் பூ இது மூன்றையும் ஒன்றாக சேர்த்து கிண்ணத்தை மூடாமல் திறந்தபடி பீரோவில் வைக்க வேண்டும். இது வைக்க வேண்டியநேரம் தான் மிகவும் முக்கியம். இந்த பரிகாரத்தில் வெள்ளிக்கிழமையில் செய்வது மிகவும் சிறந்தது.
அப்படி இல்லாத பட்சத்தில் பௌர்ணமி, அமாவாசை, சஷ்டி பஞ்சமி போன்ற திதிகளில் செய்யலாம். ஆனால் இதை செய்யும் நேரம் காலை பிரம்ம முகூர்த்தநேரமாக இருக்க வேண்டும். சூரிய உதயத்திற்கு பின்பு இந்த பரிகாரத்தை செய்தால் பலன் இருக்காது. இந்த நான்கு திதிகள் அல்லது வெள்ளிக்கிழமையில் காலை பிரம்ம முகூர்த்தவேளையில் உங்கள் பீரோவில் இந்த பொருட்களை ஒன்றாக வைக்க வேண்டும்.
வெள்ளிக்கிழமையில்செய்பவர்கள் வாரவாரம் கூட இந்த பரிகாரத்தை செய்யலாம். அடுத்த வாரம் இதில் உள்ள பொருட்களை சமையலுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். புதிய பொருள்களை பீரோவில் வைத்து விடுங்கள். இதை செய்ய செய்யவீட்டில் பண வரவு அதிகரிக்கும். வருமானம் பெருகும் செலவுகள் குறையும். இதனால் வீட்டில் எப்பொழுதும் பணவரவு குறையாமல் இருந்து கொண்டே இருக்கும் என்று சொல்லப்படுகிறது.