கை, கால்களில் கருப்பு கயிறு… மறந்தும் கூட ‘இந்த’ தவறை செய்யாதீங்க.. எச்சரிக்கும் ஜோதிடம்!
கை கால்களில் பலர் கருப்பு கயிறு கட்டி இருப்பது நீங்கள் பார்த்திருப்பீர்கள். உண்மையில், கருப்பு கயிறு பல காரணங்களுக்காக நேர்மறை ஆற்றலை உருவாக்குகிறது.. அதுமட்டுமின்றி, அது உங்களை தீய கண்ணில் இருந்து பாதுகாக்கிறது மற்றும் செழிப்பை கொண்டு வர உதவுகிறது என்று நம்பப்படுகிறது.
இப்போதெல்லாம் பலர் பேஷனாக கை, கால்களில் கருப்பு கயிறு கட்டுகிறார்கள். ஆனால் அதை எல்லோரும் கட்டக் கூடாது என்று ஜோதிடம் கூறுகிறது. மேலும் கருப்பு கயிறு பயன்படுத்த சில விதிகள் உள்ளன. நீங்கள் அவற்றை மீறினால் உங்கள் வாழ்க்கையில் எதிர்மறையான விஷயங்கள் நடக்கும். எனவே, கை கால்களில் கருப்பு கயிறு கட்டும்போது சில விஷயங்களை தெரிந்து கொள்ள வேண்டும். அவை..
இந்த ராசிக்காரர்கள் கட்டலாம்: ஜோதிட சாஸ்திரம் படி கருப்பு கயிறு மகரம் துலாம் கும்பம் ராசியை சேர்ந்தவர்கள் கட்டுவது நல்லது. மேலும், இந்த ராசியை சேர்ந்தவர்கள் எந்த சந்தேகமும் இல்லாமல் கருப்பு நிற ஆடைகள் மற்றும் கை கால்களில் கருப்பு கயிறுகளை கட்டலாம்.
இவர்கள் கட்டக் கூடாது: ஒரே விருச்சகம் மற்றும் மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு கருப்பு நிறம் ஆகாது. ஏனெனில் ஜோதிட சாஸ்திரம் படி, செவ்வாய் இந்த இரண்டு ராசிகளையும் ஆளுகிறது. எனவே, தான் கருப்பு அவர்களுக்கு நல்லதல்ல. கருப்பு கயிறுகளை அவர்கள் கட்டினால் அவர்கள் மனதில் நிச்சயமற்ற தன்மை எழும். அதுமட்டுமின்றி, அவர்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என ஜோதிடம் கூறுகிறது.
கருப்பு கயிறு எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்த விதிகள்:
நீங்கள் கருப்பு கயிறு கட்டி இருந்த இடத்தில் வேறு எந்த நிற கயிற்றையும் கட்டக்கூடாது. உதாரணமாக உங்கள் மணிக்கட்டில் கருப்பு கயிறு கட்டி இருந்தால் வேறு எந்த நிற கயிற்றையும் அங்கு கட்டக்கூடாது. ஏனெனில், கருப்பு கயிறு தனியாக இருக்கும் போது மட்டுமே அதன் விளைவுகளை காட்டும்.
சனிக்கிழமை அன்று கருப்பு கயிறு கட்டுவது நல்லது. சனிக்கிழமை சனிபகவானுக்குரியது. அவருக்கு கருப்பு நிறம் பிடிக்கும். கருப்பு கயிறு கட்டும்போது, காயத்ரி மந்திரத்தை உச்சரித்தால் கருப்பு கயிறு வலிமை மேலும் அதிகரிக்கும் மற்றும் அது உங்களை தீய கண்ணில் இருந்தும் பாதுகாக்கும் என்று ஜோதிடம் கூறுகிறது.
அதுபோல் கை கால்களில் பழைய கருப்பு கயிறு கட்டக்கூடாது. ஏனெனில், அது எதிர்மறை ஆற்றலை ஈர்க்கும்.
ஜோதிடம் படி கருப்பு கயிறு என்பது ஒருவரின் ஆற்றலுக்கு தனிப்பட்டது மற்றும் தனித்துவமாகவும் கருதப்படுகிறது. அதன் தனிப்பட்ட ஜோதிட பலனை தக்கவைத்துக் கொள்ள மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதை தவிர்க்க வேண்டும்.
நீங்கள் கருப்பு கயிறை அடிக்கடி மாற்றுவீர்கள் என்றால் இனி இந்த தவறை செய்யாதீங்க. ஏனெனில், அதை மீண்டும் மீண்டும் மாற்றும்போது அதன் செயல்திறன் குறையும் என்று ஜோதிட நிபுணர்கள் கூறுகின்றனர்.