இனி ஆன்லைன் முறையில் மட்டுமே மனைப்பிரிவு பதிவு… ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவு!
இனி ஆன்லைன் முறையில் மட்டுமே மனைப்பிரிவு பதிவு செய்ய வேண்டும் என்று ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் வீடு, மனைப்பிரிவு திட்டங்களை உருவாக்குவோர், அதற்கான ஒப்புதல் பெற்ற பின், ரியல் எஸ்டேட் ஆணையத்தில் பதிவு செய்ய வேண்டும். இதற்காக ஆன்லைன் முறையிலும் நேரடியாகவும் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வந்தன.
ஆனால் தற்போது அனைத்து வகை விண்ணப்பங்களையும், ஆன்லைன் முறையில் மட்டுமே பெற உள்ளதாக ரியல் எஸ்டேட் ஆணையம் முடிவு செய்துள்ளது.
அதன்படி குடியிருப்பு மற்றும் வழக்கமான பிரிவின் கீழ் வரும்மனைப்பிரிவு திட்டங்களை பதிவு செய்வதற்கான விண்ணப்பங்களை மார்ச் 1 முதல், ஆன்லைன் முறையில் மட்டுமே தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.