ரன்களை வாரி வழங்கிய முகமது சிராஜ்.. கடுப்பான ரோகித் சர்மா! உடனடியாக நிகழ்ந்த மாற்றம்
இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வேகப்பந்துவீச்சாளர் முகமது சிராஜ் தடுமாறியது கேப்டன் ரோகித் சர்மாவை கடுப்படைய செய்திருக்கிறது. 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இந்திய அணி இரண்டுக்கு ஒன்று என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இதனால் மீண்டும் இந்த தொடரை சமன் செய்ய இங்கிலாந்து அணி கடுமையாக போராடி வருகிறது. இந்திய அணியை பொருத்தவரை இந்த போட்டியில் வெற்றி பெற்றால் தொடரை கைப்பற்றி விடலாம். இதனால் ரோகித் சர்மா கடுமையான முயற்சிகளை இந்த டெஸ்டில் எடுத்த வருகிறார்.
மேலும் டாசையும் இழந்ததால் இங்கிலாந்து அணியை குறைந்த இலக்கில் சுருட்ட வேண்டும் என ரோகித் சர்மா திட்டம் தீட்டு வருகிறார். இந்த நிலையில் இன்றைய போட்டியில் அறிமுகமான ஆகாஷ் தீப் அபாரமாக பந்து வீசி மூன்று விக்கெட்டுகளை சாய்த்தார். ஆனால் நட்சத்திர வேகப் பந்துவீச்சாளர் சிராஜால் அவ்வாறு செயல்பட முடியவில்லை.
சிராஜ் ஆடுகளத்தின் ஸ்விங் எடுபடுமா என்ற நோக்கிலே பந்து வீசி வந்தார். ஆனால் அவருடைய பந்துவீச்சு கொஞ்சமும் எடுப்படாததால், இங்கிலாந்து அணி வீரர்கள் அவருடைய பந்துவீச்சை அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தனர். முதல் நான்கு ஓவர்லே அவர் 27 ரன்கள் விட்டுக் கொடுத்தார். இதனால் கடுப்பான ரோகித் சர்மா சிராஜை பந்துவீச்சில் இருந்து நீக்கிவிட்டு ஜடேஜாவுக்கு வாய்ப்பு வழங்கினார்.
ஒரு கட்டத்தில் ஆகாஷ் தீப் தொடர்ந்து ஏழு ஓவர்கள் வீசியதால் இன்னும் ஆடுகளம் வேகப்பந்துவீச்சிக்கு சாதகமாக செயல்படுகிறது என்று நினைத்த ரோகித் சர்மா ஆகாஷ் தீப்புக்கு ஓய்வு வழங்கிவிட்டு மீண்டும் சிராஜை பந்து வீச அழைத்தார். ஆனால் சிராஜ் மீண்டும் பந்துவீச்சில் என்று சொதப்பினார். இதனை பயன்படுத்திக்கொண்டு இங்கிலாந்து வீரர்கள் அவருடைய பந்துவீச்சில் அதிரடியாக ரன்களை சேர்த்தனர்.
இதனால் ஒவ்வொரு முறையும் கடுப்பான ரோகித் சர்மா சிராஜியிடம் போய் சென்று பந்தை சரியான முறையில் வீசுமாறு கோபமாக கூறினார்.தன்னுடைய இரண்டாவது ஸ்பேலில் முகமது சிராஜ் இரண்டு ஓவரில் மட்டும் தான் வீசினார். அதில் 16 ரன்கள் சென்றது. இதனால் இது வேலைக்கு ஆகாது என முடிவு எடுத்த ரோகித் சர்மா சிராஜை பவுலிங்கிலிருந்து நீக்கிவிட்டு அஸ்வினை கொண்டு வந்தனர்.