அடக்கொடுமையே இது எப்போ?.. கலெக்டராக மாறிய யாஷிகா ஆனந்த்.. என்ன மேட்டருன்னு பாருங்க!
இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்த யாஷிகா ஆனந்த் சல்பர் எனும் படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கப் போவதாக காக்கிச் சட்டையில் இருக்கும் தாறுமாறான ஃபர்ஸ்ட் லுக் எல்லாம் வெளியானது. ஆனால், திடீரென ஈசிஆர் ரோட்டில் வரும் போது நடந்த விபத்து காரணமாக அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டு சில மாதங்கள் மருத்துவமனையில் இருந்தார்.
அதன் பின்னர் அந்த சல்பர் படம் என்ன ஆனது என்கிற எந்தவொரு அப்டேட்டும் இல்லை. உடல்நலம் தேறிய பிக் பாஸ் பிரபலம் யாஷிகா ஆனந்த் தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் போட்டோஷூட்களை நடத்தி போட்டோக்களை வெளியிட்டு புதிய பட வாய்ப்புகளை தேடி வந்த நிலையில், தற்போது அவருக்கு ஒரு படம் கிடைத்திருக்கிறது. அதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ள நிலையில், நெட்டிசன்கள் அதை பார்த்து விட்டு பங்கமாக கலாய்த்து வருகின்றனர்.
யாஷிகா ஆனந்த்: ஜீவா, காஜல் அகர்வால் நடிப்பில் வெளியான கவலை வேண்டாம் படத்தில் நீச்சல் குள பயிற்சியாளராக நடித்து சினிமாவில் அறிமுகமானவர் தான் யாஷிகா ஆனந்த். துருவங்கள் பதினாறு, நோட்டா, இருட்டறை அறையில் முரட்டுக் குத்து உள்ளிட்ட பல படங்களில் நடித்த யாஷிகா ஆனந்த் பிக் பாஸ் சீசன் 2வில் போட்டியாளராக பங்கேற்றார். ஐஸ்வர்யா தத்தா மற்றும் யாஷிகா ஆனந்த் தங்களது அழகில் ரசிகர்களை மயக்கி அந்த சீசனை ஓட வைத்தனர்.
விபத்தால் மாறிய வாழ்க்கை: கிழக்கு கடற்கரை சாலையில் இரவு டின்னர் முடித்து விட்டு தனது நண்பர்களுடன் யாஷிகா ஆனந்த் காரில் வந்து கொண்டிருந்த போது எதிர்பாராமல் ஏற்பட்ட விபத்து காரணமாக அவரது வாழ்க்கையே மாறிவிட்டது. உயிர்த்தோழி அந்த விபத்தில் உயிரிழக்க நேரிட்ட நிலையில், மனதளவில் உடைந்து போய் விட்டார். மேலும், யாஷிகாவின் காலிலும் பலத்த காயம் ஏற்பட்டு பல தையல்கள் போட்டு சில மாதங்கள் நடக்கவே முடியாமல் படுத்த படுக்கையாக கிடந்தார். அதன் பின்னர் எழுந்து நடக்க ஆரம்பித்த யாஷிகா ஆனந்த் பிக் பாஸ் நிகழ்ச்சியில் தனது எக்ஸ் லவ்வர் நிரூப்புக்காக உள்ளே வந்து ஆதரவு அளித்தார்.
கிக்கேற்றும் பிக்ஸ்: யாஷிகா ஆனந்த் இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து கிக்கேற்றும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இளம் வயதிலேயே ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்துள்ள யாஷிகா ஆனந்த் இன்று வெளியாகி உள்ள பாம்பாட்டம் படத்திலும் சிறு வேடத்தில் நடித்திருக்கிறார். ஜீவன், மல்லிகா ஷெராவத் அந்த படத்தில் லீடு ரோலில் நடித்துள்ளனர்.
கலெக்டராக மாறிய யாஷிகா ஆனந்த்: 24 வயதே ஆன யாஷிகா ஆனந்த் தனது கவர்ச்சியான போட்டோக்கள் மூலம் இன்ஸ்டாகிராமில் 41 லட்சம் ரசிகர்களை ஃபாலோயர்களாக கொண்டிருக்கிறார். எஸ்.ஜே. சூர்யாவுடன் அவர் நடித்த கடமையை செய் படம் ஓடாத நிலையில், சமீபத்தில் அஜித்தின் மச்சான் ரிச்சர்ட் ரிஷியுடன் இணைந்து சில நொடிகள் படத்தில் நடித்திருந்தார். அந்த படமும் அவருக்கு கை கொடுக்கவில்லை. இந்நிலையில், அடுத்ததாக கே.பி. வெங்கட் இயக்கத்தில் உருவாகி வரும் ‘கலெக்டர்’ எனும் படத்தில் கலெக்டராகவே நடித்து வருகிறார் யாஷிகா ஆனந்த். அவரது ஃபர்ஸ்ட் லுக்கை பார்த்த ரசிகர்கள் யாஷிகாவுக்கு இது கொஞ்சம் கூட செட்டே ஆகவில்லை என்றும் மனசுல அறம் நயன்தாரான்னு நினைப்பு என ட்ரோல் செய்து வருகின்றனர். கிளாமரை தாண்டி கதைக்கு முக்கியத்துவமான படங்களில் நடிப்பது சூப்பர் என யாஷிகாவின் ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.