Masi Pournami 2024 : நாளை மகத்துவம் நிறைந்த ‘மாசி பௌர்ணமி’ .. இத்தனை சிறப்புகளா..?
மகம் நட்சத்திரம் என்பது 27 நட்சத்திரங்களில் ஒன்றாகும். இந்த மகம் நட்சத்திரமானது 12 மாதங்களில் வந்தாலும் கூட, மாசி மாதத்தில் வரும் மகம் நட்சத்திரம் தான் மிகவும் விசேஷமானது. உங்களுக்கு தெரியுமா.. கேது தான் மக நட்சத்திரத்தின் அதிபதி. இவர் மக்களுக்கு செல்வம், ஞானம் மோட்சம் அருள்பவராவார். இப்படி எல்லாவற்றிலும் சிறந்து விளங்கும் கேது நட்சத்திரத்தில் தான் சந்திரன் வருகிறது. அப்படி பூரண சந்திரன் அமையும் நாள் தான் ‘மாசி மாத பெளர்ணமி’ என்று அழைக்கப்படுகிறது.
மாசி மக மாத பெளர்ணமி சிறப்புகள்:
பொதுவாகவே, ஒவ்வொரு மாசி மக பெளர்ணமி அன்றும் விஷ்ணு, சிவன், முருகன் கோவில்களில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள், யாகங்கள், உற்சவங்கள் நடைபெறுவது வழக்கம். மேலும், நினைத்தது நடக்க வரம் வேண்டி இறைவனை வழிபட உகந்த நாளே மாசி மாத பௌர்ணமி ஆகும்…
மாசி மாத பௌர்ணமியில் என்ன செய்ய வேண்டும்?
ஒவ்வொரு பௌர்ணமி அன்றும் விரதம் இருப்பது மிகவும் சிறப்பான பலன்களைத் தரும் என்பது நம்பிக்கை.. அந்தவகையில், மாசி மாதத்தில் வரும் பௌர்ணமி அன்று விசேஷ பூஜைகள் செய்வதும், மற்றும் வழிபாடுகள் செய்வது அதிக நன்மைகளைத் தரும் என்பது ஐதீகம். மேலும், இந்நாளில் விரதம் இருந்து வழிப்பட்டால் புண்ணியம் கிடைக்கும் மற்றும் வேண்டியது அப்படியே நடக்கும்.
கும்பகோணத்தில் புனித நீராடல்!
மாசி மகம் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை வருவதால் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்நிலையில் இந்தியாவில் இருக்கும் 12 நதிகளில் புனித நீராடலாம். அதிலும் குறிப்பாக தமிழகத்தில் உள்ள கும்பகோணத்தில் இருக்கும் கும்பேஸ்வரர் கோவிலில் பல்லாயிரக்கணக்கான மக்கள் புனித நீராட வருவார்கள். உங்களால் ஆறு கடல்களுக்கு சென்று புனித நீராட முடியவில்லை என்றால் வீட்டிலேயே விரதம் இருந்து இறைவனை வழிபட்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளித்தால், உங்களது 7 ஜென்மம் பாவம் தீரும் என்பது ஐதீகம்.
மாசி மாத பௌர்ணமியின் மகத்தான பலன்கள்:
மாசிமாதம் வரும் பௌர்ணமி அன்று திருவண்ணாமலை கோவிலில் கிரிவலம் செல்லுவது அற்புத பலன்களை அள்ளித்தரும் என்பது ஐதீகம்.
பல்வேறு துறைகளில் வேலை பார்ப்பவர்கள் அதிகப் பலன்களை அடைவார்கள்.
அதுபோல், மாசி மாத பௌர்ணமி அன்று, கணவனின் அன்புக்கு ஏங்கும் மனைவிகள் கிரிவலம் சென்றால் அவர்களுக்கு நிச்சயமாக
கணவனின் அன்பு கிடைக்கும்.
கொடுத்த கடனை திருப்பிப் பெறமுடியாமல் தவிப்பவர்கள் மாசி மாத பௌர்ணமி அன்று கிரிவலம் சென்றால் உடனே, பணம் திரும்ப கிடைக்கும்.