8 நிமிட கெஸ்ட் ரோலுக்கு ரூ. 35 கோடி சம்பளம் வாங்கிய பிரபல நடிகர்.. யார் அவர் தெரியுமா?

இந்திய சினிமா அடுத்தகட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. தேசிய அளவில் மட்டுமில்லாமல் உலகளவில் இந்திய படங்கள் அங்கீகரிக்கப்பட்டு வருகின்றன. உலகளவில் இருக்கும் ரசிகர்களை மகிழ்விக்க பெரிய பட்ஜெட்டுகளில், பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரிக்கப்படும் படங்கள் மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இப்படி எடுக்கப்படும் சர்வதேச தர படங்களில் நடிக்கும் நடிகர்கள் 100 கோடி வரை சம்பளமாக வாங்குகின்றனர். ஆனால் பாலிவுட் நடிகர் ஒருவர் கெஸ்ட் ரோலில் நடிப்பதற்கு 35 கோடி ரூபாய் சம்பளமாக வாங்கியுள்ளார். அதாவது ஒரு நிமிடத்திற்கு ரூபாய் 4.5 கோடி சம்பளமாக பெற்றுள்ளார். அந்த பிரபல நடிகர் யார் தெரியுமா?

ரஜினிகாந்த், தளபதி விஜய், பிரபாஸ், ராம் சரண், அமீர் கான், ஷாருக்கான், சல்மான்கான் போன்ற நடிகர்கள் இந்திய சினிமாவின் உச்ச நடிகர்களாக அங்கீகரிக்கப்டுகின்றனர். இந்த நடிகர்கள் நடிக்கும் படங்கள் பெரும்பாலும் பெரிய பட்ஜெட் படங்களாக தான் இருக்கும். அதற்கு ஏற்றார் போல மக்கள் மத்தியிலும் அந்த படத்திற்கான எதிர்பார்ப்பும் உச்சத்தில் இருக்கும். இந்த ஹீரோக்கள் ஒரு படத்துக்கு ரூ.100 கோடிக்கு மேல் சம்பளம் வாங்குகிறார்கள். அவர்களில் சிலர் தங்கள் படங்களில் கிடைக்கும் லாபத்தில் பங்குகளையும் பெற்று கொள்கிறார்கள். இதனால் இவர்களில் சிலர் ரூ. 200 கோடிக்கு மேல் வருமானம் ஈட்டுகிறார்கள். அப்படி பார்த்தால், அவர்கள் நடிக்கும் படங்களில் ஒரு நிமிடத்திற்கு அவர்கள் வாங்கும் சம்பளம் ரூ. 2 கோடி முதல் ரூ.3 கோடி ஆகும்.

பாலிவுட்டின் பிரபல நடிகர் அஜய் தேவ்கன், இவர் 2022 ஆம் ஆண்டு வெளியான RRR படத்தில் வரும் ப்ளாஷ்பேக் சீனில் கெஸ்ட் ரோலில் நடித்திருப்பார். அந்த காட்சியில் நடிக்க அஜய் தேவ்கன் வாங்கிய சம்பளம் ரூ.35 கோடி. 8 நிமிடமே வரும் அந்த காட்சிக்கு அவர் ஒரு நிமிடத்திற்கு 4.5 கோடி என 8 நிமிடத்திற்கு 35 கோடி ரூபாய் சம்பளமாக பெற்றார். இந்த அளவுக்கு வேறு எந்த நடிகரும் சம்பளம் வாங்கியது இல்லையாம். இத்தனை கோடி சம்பளம் வாங்க என்ன காரணம் தெரியுமா? எஸ் எஸ் ராஜமௌலி இயக்கிய RRR படத்தின் பிளாஷ்பேக்கில் ஸ்ரேயாவுடன் அஜய் தேவ்கன் ஒரு காட்சியில் நடித்திருப்பார். 8 நிமிடம் மட்டுமே வரும் அந்த காட்சியில், அஜய் தேவ்கனுடைய கதாபாத்திரம் படத்தின் மிக முக்கிய கதாபாத்திரம்.

சில நிமிட காட்சிகளே என்றாலும் படத்தின் மிக முக்கியமான கதாபாத்திரம் என்பதால் நடிகர் அஜய் தேவ்கன் ரூ. 35 கோடி சம்பளமாக பெற்றாராம். பொதுவாக நடிகர் அஜய் தேவ்கான் தான் ஹீரோவாக நடிக்கும் படங்களில் ரூ. 35 கோடி வரை சம்பளமாக வாங்குவாராம். மேலும், படத்தில் கிடைக்கும் லாபத்தில் இருந்து 50 சதவிகிம் இவருக்கு கொடுக்கப்படுமாம். அதனால் தான் தஞ்சாஜி, திஷ்யா 2 போன்ற படங்களுக்கு அவர் பெற்ற சம்பளம் ரூ.100 கோடியைத் தாண்டியது.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *